ஆரியர்-திராவிடர்

சிந்து சமவெளி நாகரீகம், ஆரியர்கள் வருகை, திராவிட இனம் போன்றவை பற்றி அரசியல் கட்சிகளும், ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும்  அவர்கள் கட்சியின் கொள்கைக்கு சாதகமாகவோ அல்லது அவரவர் நம்பிக்கைக்கு சாதகமாகவோ வேறு வேறு விளக்கங்கள் சொல்கிறார்கள். யாரை நம்ப, யாரை விட என்று தெரியவில்லை.சென்ற மதுரை புத்தக கண்காட்சியில் ‘இந்திய வரலாறு’ என்ற புத்தகத்தை வாங்கினேன்.எழுதியவர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்.கேரளாவை சேர்ந்த கம்யூனிச தலைவர்.அங்கு இரண்டு முறை முதல்வராக இருந்தவர்.பொதுவாக கம்யூனிஸத்தையும் மதம் என்றே […]

ஆந்திராவாலா

இரண்டு பேர் எனக்கு ரூம்மேட்டாக வரவேகூடாது.ஒன்று இந்த பிரெஷர்(Fresher) குஞ்சுகள், இரண்டாவது ஆந்திரவாலாக்கள்.கடந்த இரண்டு வருடங்களாக பெங்களூரில் PGஇல் இரண்டு பேர் தங்கும் அறையில் தான் வசிக்கிறேன்.ஒரே அறைதான்.ரூம்மேட் மாறிக்கொண்டே இருப்பார்கள்.இதுவரை மொத்தம் ஏழு பேர் வரை மாறி விட்டார்கள்.என் அதிஷ்டத்திற்கு இரண்டு பேர்(ஒருவன் நம்மூர்தான்.இன்னொருவன் உத்திரபிரதேசம். இருவரும் ஒவ்வொரு மாதம் தான் இருந்தார்கள் ) தவிர வந்து சேர்ந்தவர்கள் எல்லாரும் ஆந்திரவாலாக்கள் தான்.  பிரெஷர் குஞ்சுகளை பொறுத்தவரை இன்ஜினியரிங் முடித்து விட்டு, வேலை கிடைத்து, முதல் […]

The Catcher in the Rye-ஒரு கழுவி ஊற்றல்

சில நாட்களாக வலைத்தளத்தில் பதிவிடவில்லை.எனது கோடான கோடி!! வாசகர்கள் மன்னித்தருளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.இப்போது வேலை செய்யும் கம்பெனியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியேற தகவல் தெரிவித்து விட்டேன்.இங்கு மொத்தம் மூன்று மாதம் நோட்டீஸ் பீரியட்.இது கடைசி மாதம்.எனவே வேலை தேடி கொண்டிருந்தேன். அதனால் இன்டெர்வியூக்கு தயார் செய்ய வேண்டியது இருந்தது. இதுவும் ஒரு காரணம்.வேறொரு காரணம் சோம்பேறித்தனம் தான்.இந்த தளம் ஆரம்பிக்கும்போதே மாதம் மூன்று பதிவாவது இட நினைத்திருந்தேன்.ஆனால் கடந்த ஒரு மாதமாக இண்டெர்வியூவை சாக்காக வைத்து நழுவிவிட்டேன். […]

இந்தியப்பயணம் எச்சரிக்கை

இன்று காலை இந்த செய்தியை படித்துவிட்டு காலையில் இருந்து கோபத்துடன் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.ஜெர்மனியில் இருந்து மகாபலிபுரம் சுற்றுலா வந்த பெண்ணை மூன்று பேர் பலாத்காரம் செய்துள்ளார்கள்.[ பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் தாய்நாடு செல்வதற்காக பயணசீட்டு முன்பதிவு செய்ததாகவும் அவர் தாய்நாடு சென்றால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால், குற்றவாளியை பிடிக்க ஒத்துழைப்பு தரும் வகையில் சில நாட்கள் தங்கியிருக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.ஆனால், தான் கடும் மன உளைச்சலில் தவிப்பதாகவும் எனவே உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என விரும்புவதாகவும் […]

அடுத்த பயணம்

2015இல் மலேசியாவில் இருந்து வேலையை விட்டு இந்தியா வந்தவுடன் வட இந்தியாவில் ஒரு சுற்றுபயணம் சென்று வந்தேன்.எனது முதல் பெரும் பயணம்.மலேசியாவிலிருந்து கிளம்புவதற்கு முன் நானும் எனது சகபாடியும் 4 நாட்கள் கோவா செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம்.இந்தியா வந்தபிறகு கடைசி நேரத்தில் சகபாடி ஜகா வாங்க ஒரு வேகத்தில் அடுத்த வாரத்திற்கு ஜெய்ப்பூருக்கு ரயிலில் முன் பதிவு செய்து விட்டேன்.அப்போது நாங்கள் இருந்தது சிவகாசியில் .வீட்டில் நண்பனின் கல்யாணத்திற்கு செல்கிறேன், ஒரு வாரத்தில் திரும்பி வந்து […]

ரசனை

இன்று சாரு, அவரது வலைதளத்தில் பரிந்துரைத்திருந்த பாடலைக்  கேட்டு வழக்கம் போல என்னை  நானே செருப்பால் அடித்துக்கொண்டேன்.யார்  ரசனையின் குறை?

சீனப்பயணம் – 4

மறுநாள் Forbidden city, Tianmen square இரண்டுக்கும்  செல்வதாக திட்டம்.இரண்டும்  எனது ஹாஸ்டெலில் இருந்து கிட்டத்தட்ட 3கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.நடந்தே செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தேன்.காலையில் 9 மணி அளவில் கிளம்பி Forbidden city நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.பெய்ஜிங் பற்றிய மேப் ஒன்றை எனது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன்.offlineயிலும் அது  நன்றாகவே வழி காட்டியது.கடுங்குளிரில் நடப்பது நன்றாக இருந்தது.மிக அகண்ட சாலைகள்.ஆடி பென்ஸ்  போன்ற உயர்ரக கார்களை அதிகம் காண முடிந்தது.பைக்கில் செல்பவர்கள் குளிருக்கு மெத்தை […]