ஆகவே, கொலை புரிக..

முன்னூட்டம்  : இந்தத்தளம் நீங்கள் படிப்பதற்காக அல்ல, நான் எழுதுவதற்காகவே

நான் எலி‘ இந்த தளத்தின் நிறுவனனாகிய நான் எலி.தற்போது வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாட்டிற்கு வெளியே பெங்களூர்.இந்த வலைதளம் தொடங்க முக்கிய காரணமாக இருந்தவர் என் பெறுமதிப்புற்குரிய நான் தான்.காரணம் எனது எழுத்தை பிரபஞ்சம் அனைத்துக்கும் எடுத்து செல்லும் நோக்கம் மற்றும் கடமை ஆகும்.இத்தளத்தில் கண்டவை எழுதப்படும்.இவை அனைத்தும் எனது சிந்தனைகளாகவோ,கற்பனைகளாகவோ இருக்கலாம்.இவ்வலைத்தளத்தின் பதிவுகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுவதாக உத்தேசம்.தமிழில் நான் சராசரி.ஆங்கிலத்தில் அதற்கும் கீழ்.பொறுத்தருள்க. நீண்ட காலமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் எழுத முடியாமல் போனது எழுத தெரியாதது தான்.எனினும் எனது சகபாடியின் கூற்றுக்கிணங்கி இதோ எனது முதல் பதிவை ஏற்றி இருக்கிறேன்.நன்றி சகபாடி.

சகபாடி கூற்று:

        ‘எழுத்து ஒரு தவம்,எழுதாட்டி நீ சவம் !!

எனது ஒவ்வொரு பதிவும் அப்போதைய மனநிலையை பொறுத்தது.மனநிலை மாறும் என்பதால் எந்நேரத்திலும் அவை நீக்கப்படலாம்.

எழுத எனது தகுதி என நான் நினைப்பது எனது எழுத்துக்கு நீண்ட வரலாறும் இடைவெளியும் உண்டு.எனது முதல் நாவல் “தங்கப்பெட்டி” .ராமு,சோமு எனும் இரு முக்கிய கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட சாகச நாவல்(விரிவான விமர்சனம் விரைவில்) .எனது பதினான்காம் வயதில் எழுதியது.அப்போதே பல முறை மறுவாசிப்புக்கு உள்ளாகி (நானே பனிரெண்டு முறைக்கும்  மேலாக)கிளாசிக் என்ற அந்தஸ்தை அடைந்தது.பின் மேலும் ஒரு நாவல் ,பல சிறுகதைகள்,கவிதைகள்,ஜோக்ஸ்.எவற்றுக்கும் புத்தக  பதிப்புக்குத்தான் முயலவில்லை.பதினாறு ஆண்டுகள் கழித்து ரோஜாகுமாரின் “வழுக்கி விழுந்த காதல்” என்ற கவிதைக்கு பின்னூட்டமிட்டதன் மூலம் (பின்னூட்டம்:  Nice )மீண்டும் எழுத்துலகில் .

முதல் பதிவு.மீண்டும்மீண்டும் படித்து பார்த்துவிட்டு தோளை தட்டிக்கொடுத்து இதோ பதிவேற்றம் செய்கிறேன்.

போர்க்களத்தில் ரத கஜ துரக பதாதிகள் சூழ எதிர் அணியில் ஆயுதங்களோடு யுத்தத்திற்கு தயாராக இருந்த நண்பர்கள்  உறவினர்கள்  குரு ஆகியோரைபார்த்து துயருற்று யாது செய்வதென  அறியாது கலக்கமுற்று நின்ற அர்ஜுனனை பார்த்து சகபாடி உபதேசித்தார்.

“அர்ஜுனா ,அர்ஜுனா “

“அம்பு விடு அர்ஜுனா “

நன்றி : ஜெயமோகன்,கீதை ,சகபாடி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s