கோக், பெப்சி விற்பனை சாத்தியம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், நதிநீரை சுரண்டுவதை எதிர்த்தும் மார்ச் 1 முதல் தமிழ்நாட்டில் கோக்,பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வணிகர் சங்கம் முடிவெடுத்துள்ளது.நல்ல முடிவுதான். ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.இதுவரை இந்த முடிவுக்கு எதிராக கோக்,பெப்சி நிறுவனங்களில் இருந்து எந்தவொரு தீவிர எதிர் வினையும் வரவில்லை.இதனால் அந்த நிறுவனங்களுக்கு மொத்தமாக வருடத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.போனால் போகட்டும் என்று விட்டு விடுவார்களா என்ன?இந்நேரம் பின்னால் காய் நகர்த்தத்தொடங்கி இருப்பார்கள்.பொதுவாக தமிழ்நாட்டில் எல்லா சங்கங்களும், சங்க நிர்வாகிகளும் ஏதாவதொரு கட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.கட்சிகளுக்கோ எந்த கொள்கையும் மண்ணாங்கட்டியும் கிடையாது.பன்னாட்டு கம்பெனிகளுக்கு இதனை எப்படி கையாள வேண்டும் என்று நன்றாகவே தெரியும்.வெளிநாட்டு பொருள் தடை என்பதெல்லாம் இப்போது அரசாங்கத்தாலேயே நினைத்து பார்க்க கூட முடியாத காரியம்.எனவே இதெல்லாம் கண்டிப்பாக சாத்தியமேயில்லை என்றே நினைக்கிறேன்.இந்த பிரச்சனைக்கு ஒரே ஒரு தீர்வு மக்களின் விழிப்புணர்ச்சியே.வெளிநாட்டு பானங்களை வாங்கமாட்டோம் என மக்கள் முடிவெடுத்தால்தான் உண்டு . அதேநேரம்  “வெளிநாட்டு பானங்களை புறக்கணிப்பீர், உள்நாட்டு பானங்களை அருந்துவீர் ” என்று பொவொண்டோ ,காளிமார்க் குளிர்பான படங்களை facebookஇல் ஷேர் செய்கிறார்கள். அவர்கள் மட்டும் என்ன அட்லாண்டிக் கடலில் இருந்தா நீர் உறிஞ்சுகிறார்கள்.என்ன கோக் ,பெப்சி கம்பெனிகளோடு ஒப்பிடும் போது குறைவாகவே உறிஞ்சுவார்கள்.

நான் அனைத்து வகை தடைகளுக்கும் எதிரானவன். அது ஜல்லிக்கட்டு தடை ஆனாலும், கோக் பெப்சி தடை ஆனாலும் அல்லது பூரண மதுஒழிப்பு ஆனாலும் சரி  . தடை என்பது கடைசியாக எடுக்க வேண்டிய முடிவு . மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலவேண்டும்.முயன்று ,முயற்சிகள் தோல்வியான பிறகு கடைசியாக எடுப்பதாகவே ‘தடை’ இருக்கவேண்டும்.எதுவுமே செய்யாமல், எடுத்தவுடனே தடை என்பது கையாலாகாத்தனம் மட்டுமே.

இப்போது பரவலாக ஒரு கருத்து எல்லோராலும் சொல்லப்படுகிறது.வெளிநாட்டு கம்பெனிகளினால் உள்நாட்டு கம்பெனிகளின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.எனவே வெளிநாட்டு கம்பெனிகளை தடை செய்யவேண்டும் என்பது.இந்தக்கருத்துக்கு நான் முற்றிலும் எதிர்.என்னை பொறுத்த வரை இரண்டுமே co-existஆக இருக்கவேண்டும் என்று  தான் எண்ணுவேன்.அந்த ஆரோக்கியமான போட்டிதான் நுகர்வோருக்கு நன்மை பயக்கும்.அவர்கள் வேண்டவே வேண்டாம், இவர்கள் மட்டும் போதும் என்ற கொள்கை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும் வியாபாரம் நுகர்வோரை மையமாக கொண்டு இயங்க வேண்டுமே தவிர வியாபாரியை மையமாக கொண்டு அல்ல.வெளிநாட்டு பொருள் மோகம் என்கிறார்கள் .உண்மை தான்.ஏன்?அதில் கிடைக்கும் திருப்தி.அதே திருப்தியை  அதே விலைக்கேனும் உள்நாட்டு வியாபாரிகளால் தர முடியாதது யார் குறை?இது வெறும் மோகம் மட்டும் இல்லை. அவர்கள் ஏற்படுத்திக்கொண்ட நம்பிக்கை.என் அனுபவத்தில் இந்திய வியாபாரிகளுக்கென்றே ஒரு மனநிலை உள்ளது.இன்று இவனிடம் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு கறந்துவிடுவது.மீண்டும் கடைக்கு அவனை வர வைக்க வேண்டிய எண்ணமோ,ஒரு தொலைநோக்கோ கிடையாது.இது சிறிய பிளாட்பார்ம் கடைகள்  மட்டும் இன்றி, கார்ப்பரேட் கம்பெனிகளின் மனநிலையும் இவ்வாறே உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக ஏற்பட்ட சலனத்தில்,இப்போது இளநீர், உள்நாட்டு குளிர்பானம், பழச்சாறு  போன்றவற்றிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.இதை வியாபாரிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மோசமாக பயன்படுத்தி இறுதியில் நாமே மறுபடியும் கோக் பெப்ஸியை நாடும் படி செய்து விடுவார்கள்.

கோக் பெப்சி பிரச்சனையின் முக்கிய காரணம் அவற்றை தமிழ்நாட்டில் விற்பது அல்ல.இங்கு உற்பத்தி செய்வதே.இங்கு விற்பனையை தடைசெய்தாலும் இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதை தொடரத்தான் போகிறார்கள்.உற்பத்திக்கு ஏதேனும் தடை வந்தால் தான் உண்டு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s