ஜல்லிக்கட்டு – எதிர்வினை

இந்தக்கட்டுரை ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான ஒரு கேள்விக்கு பதில் எழுதும் விதமாக எழுதியது.ஆனால் அவரது தளத்தில் வெளியாகவில்லை.
கேள்வியை படிக்க :: ஜல்லிக்கட்டும் மரபும் – கண்ணன்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் வலைத்தளத்தில் ஜல்லிக்கட்டு பற்றி திரு .கண்ணன் எழுதியதை படித்தேன்.அதை பற்றி எனது சில எண்ணங்களை கூற விரும்புகிறேன்.

உண்மையில் என்னைப்பொறுத்தவரை ஜல்லிக்கட்டு பற்றி அறிவுபூர்வமான விவாதம் நடக்கவே இல்லை என்பதே உண்மை. எல்லாருக்குமே கேள்விகள் இருக்கின்றன.எனக்கும் தான்.ஜல்லிக்கட்டு விஷயத்தில் முக்கிய பங்காற்றிய அமைப்பு PETA.அவர்களின் கருத்து என்ன, நோக்கம் என்ன என்பது போன்ற அவர்களின் பேட்டியையோ கட்டுரையையோ இது வரை எந்த பத்திரிகையும் சேனலும் வெளியிடவோ ஒளிபரப்பவோ இல்லை.அதை விட்டு விட்டு இதற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத சினிமா நட்சத்திரங்களை மட்டுமே நோண்டிக்கொண்டிருந்தது.எப்படி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வரும் கருத்துக்கள் முழுமையானதாக இல்லையோ, அதே போல் ஆதரவு போராட்டத்திற்கு எதிராக வரும் கருத்துக்கள் நேர்மையாக இல்லை என்றே கருதுகிறேன்.ஒரு முக்கியான நிகழ்வை மீண்டும் மீண்டும் எல்லோரும் பேசுவதனாலேய சிலருக்கு அதன் மேல் வெறுப்பு ஏற்பட்டுவிடும்.அந்த வெறுப்பு  மனநிலையையே போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களில் காண்கிறேன்.முதலில் “அப்போது ஏன் செய்யவில்லை ,இப்போது மட்டும் ஏன்? “அல்லது “அப்போது மட்டும் செய்தீர்கள் இப்போது ஏன் செய்யவில்லை? ” இது போன்ற கேள்விகளை கேட்க ஆரம்பித்தால் ஒரு சிறிய கல்லை கூட நகட்டமுடியாது என்பது தான் உண்மை.போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானோருக்கு எந்த உள்நோக்கமோ கிடையாது. பத்து பைசா லாபம் கிடையாது.நஷ்டம் மட்டுமே.loss of pay.அப்படி இருந்தும்  தான் நம்பும்,விரும்பும்  ஒன்றுக்கு இவ்வளவு பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வரவேற்கவேண்டியது.

எந்த ஒரு எழுச்சியோ மாற்றமோ ஓரிரு நாளில் ஓரிருவர் சொல்வதானால் ஏற்பட்டுவிடாது.மக்களின் மனநிலை மாற வேண்டும்.அதற்கு சில காலம் ஆகும். ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் இவ்வளவு பிரம்மாண்டமாக ஆனதற்கு, எல்லாம் கைகூடி வந்தது என்பது தான் உண்மை. காவேரி நீர் பிரச்சனை, ஜெயலலிதாவின் மர்ம மரணம் ,அதன் பின் நடந்த கூத்துக்கள் அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு ,விவசாய  தற்கொலை என்று அடுத்தடுத்து வந்த ஏமாற்றம் மற்றும் அதிருப்தியே ஜல்லிக்கட்டு போராட்டமாக  மொத்தமாக வெளிப்பட்டது.இதில் கலாச்சாரம், ஜல்லிக்கட்டு என்பது குறியீடு மட்டுமே.உண்மையில் இந்த போராட்டம் வலுவானதாக இல்லை.ஆரம்பத்திலேயே இதை கலைத்திருக்கலாம்.இருந்தாலும் இது பெரிதாக மாற காரணம் தமிழக அரசு அதை விட வலுவற்று இருந்தது தான்.இதே ஜெயலலிதா இருந்திருந்தால் இவர்கள் ஏழாம் நாள் நடத்தியதை அவர்  முதல் நாளே நடத்தி இருப்பார். இரண்டு  பேரிடம் இருந்தது ஒரே பிரச்சனை தான்.தலைமை இல்லாதது.அதனால்தான் பாலாஜி, ஆதி போன்றோர் தங்களையே போராட்டத்தின் தலைவர் என்று நினைத்துவிட்டார்கள்.

ஏறு தழுவுதல் எம்ஜிஆர் படங்களில் வருவது போல ஒத்தைக்கு ஒத்தையாய் மோதுவது.நிஜமாகவா?சத்தியமாக எனக்கு தெரியாது.அப்படியே இருந்தாலும் இப்பொழுது உள்ள ஜல்லிக்கட்டு ஒன்றும் எம்ஜிஆர் நாயகிகளை தழுவுவது போல ஆனந்தமானது இல்லை.இதிலும் உயிருக்கு ஆபத்து உள்ளது.பயிற்சி வேண்டும்.அப்பொழுது போர் சமூகம்.வீரம் முதன்மையானது. எனவே ஒத்தையாய் மோதிருப்பார்கள்.இப்போது அதற்கு அவசியம் இல்லை.காலவோட்டத்தில் நெறிப்படுத்தப்பட்டிருக்கலாம்.

ஜல்லிக்கட்டு நடந்த காலங்களிலேயே காளைகள் ஏராளமாக அழிந்துவிட்டன என்பது  உண்மைதான். ஏன் ?எப்போது விவசாயத்தில் காளைகளுக்கு பதிலாக டிராக்டர் வந்ததோ அப்பொழுதே காளையின் தேவை குறைந்து விட்டது.அடிமாட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.மீதம் உள்ளவை இருப்பதற்கு முக்கிய காரணம் ஜல்லிக்கட்டு. சில குடும்பங்கள் காளைகளை  ஜல்லிக்கட்டுக்காகவே வளர்க்கிறார்கள்.அவர்களை பொறுத்த வரை அதனை கௌரவமாக கருதுகிறார்கள். ஜல்லிக்கட்டு தடை செய்யப்படும் பொது அவர்களுக்கும் அதை வளர்க்க தேவை இருக்காது. மொத்தமாக அழிந்துவிடும். இது கடைசி  முயற்சி மட்டுமே.

ஜனநாயக நாட்டில் மக்கள் ஒன்றை வலியுறுத்த போராட்டம் நடத்துவதன்றி வேறு என்ன வழி இருக்கிறது.உச்சநீதிமன்றத்தில் தோல்விக்குப்பிறகுதான் போராட்டம் தெருவிற்கு வந்தது.போராட்டத்தில் முக்கிய நோக்கமே ஜல்லிக்கட்டு பற்றி சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்பது தான் .முக்கியமாக காளைகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பது போல.சட்ட மாற்றத்திற்கு காலம் ஆகும் போலும்.குடியரசு தினம் நெருங்குவதனால் கூட்டத்தை கலைக்கும் பொருட்டு தமிழக அரசு இந்த அவசர சட்டத்தை கொண்டு வந்தது. நாட்டு நாய்கள் அழிந்ததற்கு காரணம் அதற்கான பொருளாதார தேவையோ, கலாச்சார தேவையோ  இல்லை என்பது தான்.

மற்ற படி ராஜஸ்தான் ஆந்திரா மகாராஷ்டிரா  போன்ற மாநிலங்களில் காளைகளின் நிலைமை பற்றி எனக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.

வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணியுங்கள் சுதேசி பொருட்களை வாங்குங்கள் என்பது போன்ற வெற்று கூப்பாடுகளை நிறுத்திவிட்டு யோசிக்கவேண்டும்.வாங்குபவரை ஏன் குறை சொல்ல வேண்டும்? ஒரு நுகர்வோர் எதற்கு இங்கு சுதேசி பொருட்களை தவிர்த்து வெளிநாட்டு தயரிப்புகளை வாங்குகிறான்.வெளிநாட்டு பொருட்களின் மீதுள்ள மோகம் என்கிறீர்கள்.அந்த மோகம் ஏன்? அதனால்  கிடைத்த,கிடைக்கிற  திருப்தி.அதே திருப்தியை அதே விலைக்கேனும்  உள்நாட்டு உற்பத்தியாளர்களால் தர முடியவில்லை என்பது அவர்கள் இயலாமையே.இதில் வாங்குபவனை குற்றம் சொல்லி எந்த ப்ரொயஜனம் இல்லை.எந்த ஒரு நுகர்வோனும் தான் கொடுக்கிற விலைக்கு தகுந்த தரத்தை எதிர்பார்ப்பது இயலபுதான். முதலில் பிரச்சனை எங்கு என்று  கண்டுபிடித்து அதை களைய முயற்சிகள் எடுக்க வேண்டும்

இறுதியாக, உங்கள் ஈகோ வினாலோ அல்லது உங்கள் தோல்விக்கு மற்றவரை பொறுப்பேற்கவைக்கும்  விதமாகவோ, நடந்த போராட்டத்தை குறை கூறுவதன்மூலம் அந்த இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் ஜனநாயகத்தின் மீது அவ நம்பிக்கையை மட்டுமே விதைக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இப்படிக்கு,

‘நான் எலி ‘.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s