நூறு வருட சினிமா

2014இல் வெளியான Boyhood எனும் திரைப்படத்தை 12 வருடங்களாக 2002இல் ஆரம்பித்து 2013 வரை எடுத்திருக்கிறார்கள் .ப்ரொடக்ஷன் பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லை . திட்டமிட்டே தான் எடுத்து இருக்கிறார்கள்.கதை அப்படி . ஒருவனின் 6 வயது முதல் 18 வரை நடக்கும் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவன் வளர்ச்சி மாற்றத்தை கூறும் கதை என்பதால் , அதே நடிகர்களை வைத்து அவ்வப்போதாக 12 ஆண்டுகள் படம் பிடித்துள்ளனர் . டாகுமெண்டரி  எல்லாம் இல்லை. Fiction தான். Resemblanceஉள்ள ஆட்களை நடிக்கவைத்து சீக்கிரமாகவே முடித்திருக்கலாம்.Experiment ஆக  செய்திருப்பார்கள் போல.ஆனால் கோல்டன் க்ளோப் அவார்டு உட்பட பல விருதுகளை அள்ளியுள்ளது.நான் படத்தை இன்னும் பார்க்கவில்லை.அதனால் இதற்கு மேல் பேச முடியாது. சினிமாவில் அவ்வப்போது யாரேனும் கிறுக்குத்தனங்களை experimentஆகவோ விளம்பரத்திற்காகவோ செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.அந்த வரிசையில் இன்னொரு படம். சாருநிவேதிதாவை உங்களுக்கு தெரிந்திருந்தால் Remy Martinஐயும்  தெரிந்திருக்கும்.மற்றவர்கள் இங்கு Remy Martinஐப்  பற்றி மட்டும் தெரிந்துகொண்டால் போதும்.Remy Martin என்பது பிரெஞ்சு cognac பிராண்ட். இவர்கள் ஒரு படம் தயாரித்து இருக்கிறார்கள்.2015இல் ஒரே மூச்சாக எடுக்கப்பட்ட இந்தப்படத்தை  18 டிசம்பர் 2115ல் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.தட்டச்சு பிழை எல்லாம் இல்லை.நிஜமாகவே சரியாக நூறு வருடங்கள் கழித்து 2115ல் வெளியிடவிருக்கிறார்கள் .Remy Martin கம்பெனியின் Louis xii என்ற cognac தயாரிக்க நூறு ஆண்டுகள் ஆகும் என்பதில் இன்ஸ்பியராகி இப்படி ஒரு ஐடியா. படத்தின் கதையை சீக்ரெட்டாகவே வைத்திருக்கிறார்கள்.2115இல் உலகம் எப்படி இருக்கும் என்பதை மூன்று விதமாக guess செய்து மூன்று ட்ரைலர் மட்டும் வெளியிட்டு விட்டு,  படத்தை Remy Martin கம்பெனியின் புல்லட் ப்ரூப் பாதுகாப்புள்ள சேப்டி பாக்ஸில் வைத்து பூட்டி விட்டார்கள்.அந்த சேப்டி பாக்ஸ்ஆட்டோமேட்டிக்காக படத்தின் ப்ரீமியர் அன்று அதாவது 18 டிசம்பர் 2115 அன்று திறக்குமாறு செட் செய்து வைத்துள்ளார்கள் . ஏதோ, காதை காட்டுறவன் காட்டுனா, குத்துறவன் கடப்பாறைய வச்சு குத்துவானாம்.இருந்தாலும் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த படத்தின் இயக்குனர் SinCity, Mexico trilogy போன்ற படங்களை இயக்கிய Robert Rodriguez என்பதால் தான்.இவரும் இவர் கூட்டாளி Quentin Tarantinoவும் இணைந்து 70களில் அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கிய  exploitation மூவி genre ஐ மெய்ன்ஸ்ட்ரீம் படங்களில் கலந்து அட்டகாசமாக படம் எடுத்திருப்பார்கள்.இவரது Sincity, From dustk till dawn, Machete போன்றவை எனது பேவரைட்.படத்தில் திரைக்கதை எழுதி நடித்திருப்பவர் John Malkovich எனும் பிரபல நடிகர்.

எது எப்படியோ 2115இல் இந்தப்படம்  வெளியாகும்போது அதை பார்க்க, எடுத்த அவர்களும் இருக்க மாட்டார்கள் ,இதை எழுதிய நானும் இருக்க மாட்டேன் ,வாசிக்கும் நீங்களும் இருக்க மாட்டீர்கள்.படத்தின் பெயர்  100 Years: The Movie You Will Never See.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s