சசிகலா

சசிகலாவுக்கு 6 ஆண்டுகள் சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் அளித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.தமிழக அரசியலில் கடந்த மூன்று வாரங்களாக நடந்த நிகழ்வுகள் எந்த ஒரு வணிக சினிமாவுக்கும் கொஞ்சமும் சளைத்தது இல்லை. OPS முதல்வராக பதவியேற்றது, ராஜினாமா செய்தது, பின் ஜெயலலிதா  சமாதியில் தியானம், சசிகலாவுக்கு எதிராக கிளம்பியது, தொடர்ந்து MLAகள் கடத்தல், அவர்களின் குத்து டான்ஸ், மாறு வேடத்தில் தப்பித்தல், கடைசியில் எதிர்பார்த்த உச்ச நீதி மன்ற தீர்ப்பு.இத்தோடு முடிந்தது என்றால் இல்லை.அடுத்து யார் முதல்வர் என்பது தான் கிளைமாக்ஸ்,பன்னீர்செல்வமா அல்லது பழனிச்சாமியா? ஆனால் இன்னும் மர்மமாக இருப்பது யார் இதன் இயக்குனர் என்பது.ஏனெனில் பன்னீர்செல்வம் பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்நிகழ்வுக்கு முன்னர் அவர் சசிகலாவுக்கு எதிராக செயல்படுவார் என்று சொல்லியிருந்தால் அவரே நம்பி இருக்கமாட்டார். ஜெயலலிதா சமாதி தியான நிகழ்விலிருந்து அவர் முகத்தில் தெரியும் நம்பிக்கையை பார்க்கும் போது முடிவு தெரிந்தே களம்  இறங்கிருக்கிறார் என்றே தெரிகிறது.OPS ஒன்றும் உத்தமரெல்லாம் இல்லை. அடிக்கும் கொள்ளையில் அனைவருக்கும் தான்  பங்கு.

தமிழக அரசியல் வரலாற்றில் மிக அதிமாக மக்களால் வெறுக்கப்பட்ட நபர் என்றால் அது சசிகலா தான். அவர்மேலுள்ள அந்த வெறுப்புதான் இன்று ஜெயலலிதாவையே தேவதை பிம்பமாக ஆக்கியுள்ளது. எந்த வித தகுதியும் இன்றி, அரசியல் அனுபவம் இன்றி, முழுக்க முழுக்க ரௌடியிசம் உதவியுடன் கொல்லை புறம் வழியாக திடீரென உள்ளே குதித்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மர்ம மரணம், அப்பட்டமாக தெரியும் பதவி வெறி, குற்ற வரலாறு இவை அனைத்தும் தான் மக்கள் சசிகலாவுக்கு எதிராகவும் OPSக்கு ஆதரவாகவும் திரும்ப செய்தது.இந்த வெறுப்பைதான் தேவைப்பட்டவர்கள் பயன்படுத்தி கொண்டு நாடகத்தை தொடங்கியிருக்கார்கள். OPSஐ பயன்படுத்திக் கொள்கிறார்கள். OPSஇன் எழுச்சி, ஆளுநரின் தாமதம், உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு எல்லாம் சசிகலாவுக்கு எதிரான அவர்களின் காய் நகர்த்தல்களே. இன்று சசிகலாவுக்கு ஆதரவு தருபவர்களுக்கு பணம், பதவி இதை தவிர வேறெந்த காரணமும் இல்லை.

இந்த தீர்ப்பு சரியான நேரத்தில் வந்திருந்தாலும் இது மிகதாமதமானதே .ஒரு வழக்கை மிக நீண்ட நாட்களாக நடத்துவதும், குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குவதும் தான் குற்றவாளி அதிலிருந்து தப்பிக்க அனைத்து  சந்தர்ப்பத்தையும் கொடுக்கிறது. இன்று சட்டத்தில் நிரபராதிகளுக்கு இருக்கும் அத்தனை ஓட்டைகளையும் குற்றவாளிகளே சாமர்த்தியமாக பயன் படுத்திக்கொள்கிறார்கள்.1996இல் பொறுக்கி புகழ் சுப்பிரமணிய சாமி தொடுத்த வழக்கில் 20 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வந்துள்ளது. ஏற்கனவே 2014இல் குற்றத்தை ஊர்ஜிதம் செய்து சிறப்பு நீதிமன்றம் ஜெ, சசிகலா உட்பட நான்கு பேருக்கு தண்டனை வழங்கியது. பின் மேல்முறையீடு செய்து 2015இல் நீதியரசர் குமாரசாமி விடுதலை செய்தார்.  மீண்டும் கர்நாடக அரசு, சுப்ரமணியசாமி, திமுக அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு புகார் செய்தனர். அதன் தீர்ப்பே இப்பொழுது வந்துள்ளது. இப்போது சசிகலா மறுமுறையீடு செய்யலாம் என்று சுப்பிரமணிய சாமியே எடுத்து கொடுத்துள்ளார். இது ஒரு தொடர்கதை போலும். மேல்முறையீடு, ஜாமீன். மேல்முறையீடு, ஜாமீன். மேல்முறையீடு, ஜாமீன்.

ஒரு வழக்கை தீர விசாரிக்கவும், குற்றம் சாட்டப்பவருக்கு அவரது தரப்பை நிரூபிக்க அவகாசம் தருவது அவசியம் தான். ஆனால் இருபது வருடம் என்பது அதிகம்.  இந்த இருபது ஆண்டுகளில் பத்து ஆண்டுகள் ஜெவின் ஆட்சி. தமிழ்நாடு ஒரு குற்றவாளி கையில் பத்து வருடம் இருந்துள்ளது. தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதியே.இங்கு நீதிமன்றங்களும், நீதிபதிகளும் கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள்.எதன் அடிப்படையில் நால்வரையும் விடுதலை செய்தீர்கள் என்று நீதியரசர் குமாரசாமியை பார்த்து கேட்கமுடியாது. வழக்கு போட்டால் நீதிபதிக்கு எதிராக யார் எடுத்து நடத்துவார்கள்.மக்களுக்கு நீதித்துறை மேல் உள்ள அவநம்பிக்கைக்கு இவைகள் எல்லாம் தான் காரணம்.

யார் நடத்திய நாடகம் என்று தெரியவில்லை. இப்போதைக்கு தீர்ப்பு நமக்கு சாதகமாக இருப்பது மகிழ்ச்சியே.அராத்து முகநூலில் எழுதிய குறிப்பு(சிறிய மாற்றத்துடன்) தான் இங்கு உண்மை.

“தர்மத்திற்கெல்லாம் வேலையில்லை .சூதே கவ்வுகிறது ,சூதே வெல்கிறது “

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s