ரசனை

இன்று சாரு, அவரது வலைதளத்தில் பரிந்துரைத்திருந்த பாடலைக்  கேட்டு வழக்கம் போல என்னை  நானே செருப்பால் அடித்துக்கொண்டேன்.யார்  ரசனையின் குறை?

Advertisements

சீனப்பயணம் – 4

மறுநாள் Forbidden city, Tianmen square இரண்டுக்கும்  செல்வதாக திட்டம்.இரண்டும்  எனது ஹாஸ்டெலில் இருந்து கிட்டத்தட்ட 3கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.நடந்தே செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தேன்.காலையில் 9 மணி அளவில் கிளம்பி Forbidden city நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.பெய்ஜிங் பற்றிய மேப் ஒன்றை எனது மொபைலில் தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன்.offlineயிலும் அது  நன்றாகவே வழி காட்டியது.கடுங்குளிரில் நடப்பது நன்றாக இருந்தது.மிக அகண்ட சாலைகள்.ஆடி பென்ஸ்  போன்ற உயர்ரக கார்களை அதிகம் காண முடிந்தது.பைக்கில் செல்பவர்கள் குளிருக்கு மெத்தை […]

சீனப்பயணம் – 3

காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி 7.30 மணி வாக்கிலேயே பெய்ஜிங் சவுத் ஸ்டேஷனை அடைந்து விட்டேன்.ஸ்டேஷன் உள்ளேயே காலை உணவை முடித்துவிட்டு ரயில் ஏறி விட்டேன்.புல்லட் ட்ரெயின்.பெய்ஜிங்கும் ஷாங்காய்க்கும் இடையே உள்ள தொலைவு 1318கிலோமீட்டர்.5 மணி நேரத்தில் அடைந்து விடலாம்.மணிக்கு 300கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது.சரியாக 9 மணிக்கெல்லாம் ரயிலை எடுத்து விட்டான்.பெய்ஜிங்கை தாண்டியவுடனே பனிமூட்டத்தை பார்க்க முடிந்தது.தூசுடன் கூடிய பனிமூட்டம்.அந்த இடத்தில் சுற்றுசூழல் மாசுபட்டிருந்தது தெளிவாக தெரிந்தது.நிறைய தொழிற்சாலைகள் இருக்கும் போல.இரவு பனிப்பொழிவும் இருந்திருக்கும் […]

சீனப்பயணம் – 2

காலையில் புதிய ஊரில் விழிப்பது எப்போதும் எனக்கு பிடித்தமானது.அப்பொழுது தான் அறையை கவனித்தேன்.இரண்டு bulk பெட், லக்கேஜ் வைப்பதற்கு ஒரு மரத்தாலான பீரோ,மூன்று பேர் தாராளமாக நிற்பதற்கு இடம் இவ்வளவுதான் அறை.சுத்தமாகவே இருந்தது.ஷேரிங் பாத் ரூம் மற்றும் டாய்லெட் தனியாக ஆண்களுக்கு தரைதளத்திலும் பெண்களுக்கு முதல் தளத்திலும் இருந்தது.என் அறையை என்னுடன் ஒரு சீனப்பெண்ணும் இரண்டு ரஷ்யர்களும் ஷேர்செய்துகொண்டிருந்தார்கள்.எனக்கு மேல் இருந்த படுக்கையில் சீனப்பெண்.சற்று கனமான பெண்.மேல் படுக்கையில் புரண்டால் கீழே அதிர்ந்தது.இரவில் திடீர் திடீர் என்று […]

சீனப்பயணம் – 1

சீனாவுக்கு போகலாம் என முடிவெடுத்தது மிகவும் தற்செயல்தான்.அதற்கு  முன் வெளிநாடுகள் என்றால் மலேசியாவில் இரண்டரை வருடங்கள் வேலை செய்து கொண்டு இருந்தேன்.அங்கு இருந்த போது தாய்லாந்தில் Phuket சென்றுள்ளேன். 2015 டிசம்பரில்  நேபால். ஆறு மாதங்களுக்கு முன்தான்  மறுபடியும் தாய்லாந்தில் பாங்காக் சென்றிருந்தேன்.இவைகளை tour என்பதை விட backpacking  என்று சொல்ல தான் விரும்புவேன்.எல்லாம் கடைசி நேரத்தில் எடுத்த முடிவு என்பதால் எப்போதும் போல தனியாக தான் சென்றேன்.அப்படியே கூப்பிட்டிருந்தாலும் யாரும் வந்திருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.இந்தியர்களை பொறுத்தவரை பயணம் […]

எம்மா ஸ்டோனுக்கு இன்னிசை வெண்பா

ய(எ)ம்மாவெனும் நண்பனின் அலறல் கேட்டு சும்மா கழிவறையில் முக்கிக்கொண்டிருந்தவன் பதரிப்பார்த்தால் எம்மா ஸ்டோனுக்கு ஆஸ்காரென இளித்தான் ஒம்மா உன்ன ஓடவிட்டு அடிக்க வராதீர்கள்.இன்று காலையில் ஒரு மணி நேரம் வெண்பா பற்றி பார்த்ததன் விளைவு. மாச்சீர், விளச்சீர், காய்ச்சீர்,ஈற்றடி,ஈற்றுச்சீர், தேமா, புளிமா என்று தலையே சுற்றிவிட்டது. எனவே வெண்பாவுக்கான இலக்கணம் இல்லை என்றாலும் இன்னிசைக்கான இலக்கணத்துடன் இந்த இன்னிசை வெண்பா. நான்கு சீர்களிலும் எதுகை, இரண்டாம் அடியில் தனிச்சொல் இல்லாமை என்ற இலக்கணத்தின் படி மட்டும் . […]