சீனப்பயணம் – 1

சீனாவுக்கு போகலாம் என முடிவெடுத்தது மிகவும் தற்செயல்தான்.அதற்கு  முன் வெளிநாடுகள் என்றால் மலேசியாவில் இரண்டரை வருடங்கள் வேலை செய்து கொண்டு இருந்தேன்.அங்கு இருந்த போது தாய்லாந்தில் Phuket சென்றுள்ளேன். 2015 டிசம்பரில்  நேபால். ஆறு மாதங்களுக்கு முன்தான்  மறுபடியும் தாய்லாந்தில் பாங்காக் சென்றிருந்தேன்.இவைகளை tour என்பதை விட backpacking  என்று சொல்ல தான் விரும்புவேன்.எல்லாம் கடைசி நேரத்தில் எடுத்த முடிவு என்பதால் எப்போதும் போல தனியாக தான் சென்றேன்.அப்படியே கூப்பிட்டிருந்தாலும் யாரும் வந்திருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.இந்தியர்களை பொறுத்தவரை பயணம் செல்வது என்பது ஆடம்பர செலவு.பட்ஜெட் ட்ராவல், backpacking என்பதெல்லாம் தெரியாது. அதுவும் வெளிநாட்டுப்பயணம் என்பதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. செல்பவர்கள் பொதுவாக பணக்காரர்களாக இருக்க வேண்டும் .இல்லை ஐடி வேலை பார்ப்பவர்களை onsite க்கு கம்பெனி  அனுப்பினால் தான் உண்டு.நான் வேலை பார்ப்பது ஐடீ துறை தான். ஆனால் என்னை onsite அனுப்பும் அளவுக்கு பெரிய கம்பெனியெல்லாம் இல்லை. இது முழுக்க முழுக்க எனது ஊர் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையே.

IMG_20161224_142917

இப்பொழுது வேலை செய்யும் கம்பெனியில் yearend விடுமுறை என்று டிசம்பர் 25 முதல் ஜனவரி 1 வரை தருவார்கள்.சென்ற முறை மேலும் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு நேபாளில் 9நாட்கள் அன்னபூர்ணா பேஸ் கேம்ப் ட்ரெக்கிங் சென்றேன். முதலில் ஆசியாவை தவிர்த்து வேறு ஏதேனும் கண்டத்தில் உள்ள நாட்டுக்கு செல்லலாம் என்று உத்தேசித்திருந்தேன்.எகிப்து தான் முதல் தேர்வு.ஆனால் விக்கி ட்ராவல் இணையதளத்தில் செக் செய்தபோது அங்கு terrorism threat இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள்.சரி பெய்ஜிங் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.அதற்கு இரண்டு காரணம்.ஒன்று சீனப்பெருஞ்சுவர் பெய்ஜிங் அருகில் உள்ளது  என்பதும், அங்கு வானிலை 1 டிகிரியிலிருந்து 5 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததும் தான்.எனக்கு பனி படர்ந்த சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் விருப்பம்.முக்கியமாக பனிமழையில் நனைய வேண்டும் என்பது.அதனாலே நேபால் ட்ரெக்கிங்கும் ,பின் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் ஸ்ரீநகர் முதல் சண்டிகர் ட்ரிப்பும் சென்றேன்.இவற்றில் ஆங்காங்கே பனியைப் பார்த்தாலும் எதுவும் எதிர்பார்த்தது போல இல்லை.கரன்சி எக்ஸ்சேன்ஜ் ரேட்,விமான டிக்கெட் விலை எல்லாம் செக் செய்து சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக பெங்களூரில் உள்ள ஏஜென்சி மூலமாக விசாவுக்கு விண்ணப்பம் செய்தேன். 8 நாட்களில் தருவதாக சொல்லி அந்தா இந்தா என்று இழுத்தடித்து 16 நாட்கள் இழுத்தடித்து கடைசியில் எனது departure தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் கொடுத்தார்கள்.மறுநாள் சென்னை சென்று அதற்கு மறுநாள் காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து  கொழும்பு வழியாக பெய்ஜிங்க்கு விமானம்.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.ஹாங்காங் வழியாக செல்லும் விமானத்தில் விலை அதிகமாக இருந்ததினால் இதனை பதிவு செய்திருந்தேன்.சீனாவைப்  பற்றித் தெரிந்துகொள்ள பல்லவி ஐயர் எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘சீனா விலகும் திரை’ என்ற புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து வாசித்து முடித்திருந்தேன்.பொதுவாக தமிழ் மொழிபெயர்ப்பு என்றாலே கடித்து குதறி இருப்பார்கள். ஆனால் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு மிகவும் நன்றாக இருந்தது.எனது திட்டம் சீனாவில் மொத்தம் 7 நாட்கள். இதில் 6 நாட்கள் பெய்ஜிங்கிலும் 1 நாள் மட்டும் ஷாங்காய் யிலுமாக திட்டம்.

IMG_20161225_001702_HDR

டிசம்பர் 24ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு பெய்ஜிங் நேரப்படி இரவு 11 மணிக்கு சென்று சேர்ந்தேன்.எப்போதுமே இம்மிகிரேஷனில் இந்தியாவில் இருந்து புறப்படும் போதும்  சரி இல்லை இறங்கிய பிறகும் சரி வயிற்றில் உருவமில்லா உருண்டை உருள ஆரம்பித்து விடும்.ஏற்கனவே ஒரு தடவை சென்னையில் இருந்து வேலை காரணமாக மலேஷியா செல்ல விருந்த போது,சென்னை இம்மிகிரேஷனில் பாஸ்ப்போர்ட்டில் பிரச்சனை இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள்.அதாவது இந்தியாவில் இரண்டு விதமான பாஸ்போர்ட் தருகிறார்கள்.ECR மற்றும் ECNR என்று.ECR(Emmigration check required) பாஸ்போர்ட் என்பது லேபர் பாஸ்போர்ட்.பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தவர்களுக்கு தரும் பாஸ்போர்ட்.பாஸ்ப்போர்ட்டின் முதல் பக்கத்தில் ஸ்டாம்ப் வைத்திருப்பார்கள்.மற்றவர்களுக்கு ECNR(Emmigration check not required)  பாஸ்போர்ட்.இதில் ஸ்டாம்ப் இருக்காது.இந்த பாஸ்போர்ட் பெற பத்தாம் வகுப்பு சான்றிதழும்,டிகிரி முடித்திருந்தால் டிகிரி சான்றிதழும் வழங்க வேண்டும்.நான் MCA முடித்திருந்தாலும், எனக்கு பாஸ்ப்போர்ட்டின் முதல் பக்கத்தில் ஸ்டாம்ப் செய்திருந்தார்கள்.அதனால் அனுமதிக்க வில்லை(அந்த பாஸ்ப்போர்ட்டை வைத்து ஏற்கனவே இரண்டு முறை மலேஷியா சென்றிருந்தேன்).இதனால் சரியான தேதியில் சேராததால் அந்த வேலை இழந்து பின் புது பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்கையில் என்ன பிரச்சனை என்று விசாரித்த போது, நான் 12ஆம் வகுப்பு சான்றிதழும் ,டிகிரி சான்றிதழும் கொடுத்திருந்ததாகவும் 10 வகுப்பு சான்றிதழ் தரவில்லை என்றும் சொன்னார்கள்.போங்கடா @#&$$ என்று தான் சொல்ல தோன்றியது. பெய்ஜிங் ஏர்போர்ட் இம்மிகிரேஷனில் இரண்டு சீனா அதிகாரிகள் உற்று உற்று பார்த்து அனுப்பிவிட்டார்கள். ஆனால் customs இல் பிடித்து கொண்டார்கள்.எதற்காக இலங்கை வழியாக வந்தேன் என்று?பின் விளக்கம் சொல்லி backpack முழுவதும் சோதனை செய்து,ஹோட்டல் புக்கிங்,பிளைட் ரிட்டன் டிக்கெட்,தேவையான பணம் இருக்கிறதா என செக் செய்து, ஒரு வழியாக அரை மனதாக விட்டு விட்டார்கள். வெளியே வரும்போது மணி இரவு 1.30 ஆகிவிட்டது.கடுங்குளிர்.1டிக்ரீதான் இருக்கும்.  எப்படியோ சீனாவில் கால் வைத்தாகிவிட்டது .இந்நேரம் சீனர்கள் உடல் அதிர்த்திருக்கும்.ஏற்கனவே ஹாஸ்டலில் படுக்கை முன்பதிவு செய்திருந்தாலும் இரவு 9 மணிக்கு மேல் வருவதாக இருந்தால் முன்பே தெரிவிக்க சொல்லி இருந்தார்கள்.ஆனால் நான் அறிவித்திருக்கவில்லை. எப்படியும் டாக்சியில் தான் செல்ல வேண்டும்.புதிய நாட்டில் இந்த இரவில் தனியாக செல்லவும் பயம் தான்.மிகவும் அசதி.குளிரும்.பின் தைரியத்தை வரவழைத்து கொண்டு ஒரு 3 மணி அளவில் கார் பிடித்து 45 நிமிடத்தில் ஹாஸ்டல் சென்று சேர்ந்துவிட்டேன்.சீனாவில் பெரும்பாலோர்க்கு  குறைந்த பட்சம் கூட ஆங்கிலம் தெரியாது என்று படித்திருந்தேன்.உண்மைதான்.ஓட்டுனருக்கு மாண்டரின் மொழியில் இருந்த எனது ஹாஸ்டல் ரெஸிப்ட்டை காண்பித்தேன்.ஆங்கில ரெஸிப்டும் இருந்தது.அவருக்கு ஹாஸ்டல் தெரிந்திருந்தது.நான் பதிவு செய்திருந்தது Xicheng என்ற பகுதியில் இருந்த “Beijing sunrise youth hostel Beihai Branch” எனும் ஹாஸ்டல்.நல்ல வேளை பதிவு செய்திருந்த படுக்கை காலியாகத்தான் இருந்தது.reception இல் 25 வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன் இருந்தான்.தட்டு தடுமாறி ஆங்கிலம் பேசினான்.ஏழு நாட்களுக்கு 320CNY.கொடுத்துவிட்டு எனது ரூம் சாவியை வாங்கிக்கொண்டேன்.நான் பதிவு செய்திருந்தது 4 ஷேரிங் பெட் ரூம்.2 bunk பெட்.சத்தம் இல்லாமல் உள்ளே நுழைந்து இடப்புறம் இருந்த bunk பெட்டின் கீழ் பகுதி பெட் இல் படுத்துவிட்டேன். மற்ற படுக்கைகளில் ஆட்கள் படுத்திருந்தார்கள். வெளியே ஸீரோ டிகிரி.உள்ளே போர்வையை போர்த்தி படுத்தது இதமாக இருந்தது.படுத்தவுடன் உறங்கிவிட்டேன்.

(மேலும்  பயணிப்போம் ..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s