சீனப்பயணம் – 2

DSCN1294காலையில் புதிய ஊரில் விழிப்பது எப்போதும் எனக்கு பிடித்தமானது.அப்பொழுது தான் அறையை கவனித்தேன்.இரண்டு bulk பெட், லக்கேஜ் வைப்பதற்கு ஒரு மரத்தாலான பீரோ,மூன்று பேர் தாராளமாக நிற்பதற்கு இடம் இவ்வளவுதான் அறை.சுத்தமாகவே இருந்தது.ஷேரிங் பாத் ரூம் மற்றும் டாய்லெட் தனியாக ஆண்களுக்கு தரைதளத்திலும் பெண்களுக்கு முதல் தளத்திலும் இருந்தது.என் அறையை என்னுடன் ஒரு சீனப்பெண்ணும் இரண்டு ரஷ்யர்களும் ஷேர்செய்துகொண்டிருந்தார்கள்.எனக்கு மேல் இருந்த படுக்கையில் சீனப்பெண்.சற்று கனமான பெண்.மேல் படுக்கையில் புரண்டால் கீழே அதிர்ந்தது.இரவில் திடீர் திடீர் என்று யாருடனாவது செல்போனில் பேசிக்கொண்டிருப்பாள்.பயண களைப்பினால் காலை எழுந்தது 10 மணிக்குதான்.ஷாங்காய் பயணத்திற்காக டிக்கெட்டை பெற பெய்ஜிங் சவுத் ஸ்டேஷன் செல்ல வேண்டும்.காலை உணவை ஹாஸ்டெலிலேயே முடித்துவிட்டேன்.வெளியில் 5டிகிரி குளிர்.பெங்களூரில் மலிவான விலையில் வாங்கிய குளிருக்கான உடையை அணிந்திருந்தேன்.அதுவே போதுமானதாக இருந்தது.

DSCN1307ஒட்டு மொத்த பெய்ஜிங்கையும் subway எனும் எலக்ட்ரிக் ட்ரெயின் மூலம் இணைத்திருக்கிறார்கள்.பட்ஜெட் ட்ராவலர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.கோலாலம்பூர், பாங்காக், டெல்லி போன்ற நகரங்களிலும் இது போன்ற ரயில் சேவையை பார்த்திருக்கிறேன்.அனைத்து முக்கியமான இடங்களுக்கும் இதன் மூலம் சென்று விடலாம்.நான் அங்கு இருந்த ஆறு நாளும் இதை தான் பயன்படுத்தினேன்.வெள்ளைக்காரர்கள் பொதுவாக இது மிகவும் நெரிசல் என்பார்கள்.ஆனால் இந்தியர்களுக்கு இது பழக்கமானதுதான்.Xisi ஸ்டேஷனுக்கு அருகில்தான் எனது ஹாஸ்டல் இருந்தது.5 நிமிட நடை. சவுத் ரயில்வேஸ்டேஷன் சென்று எனக்கு ஷாங்காய் போவதற்கான டிக்கெட்டை வாங்கிக்கொண்டேன்.ஏற்கனவே chinadiy.com இணையதளத்தில் பதிவு செய்திருந்தேன்.அதற்கு டிக்கெட் போன்ற ஒன்றை அனுப்பி இருந்தார்கள்.அதை ஸ்டேஷன் கவுண்டரில் கொடுத்து உண்மையான டிக்கெட் வாங்கி கொள்ள வேண்டும்.எனக்கு நாளை மறுநாள் தான் ஷாங்காய் ட்ரெயின்.இருந்தாலும் இப்பொழுதே வாங்கி வைத்துக்கொண்டேன்.பின் அங்கிருந்து summer palace சென்றேன். Beigongmen ஸ்டேஷனில் இருந்து 300 மீட்டர் தொலைவில் சம்மர் பேலஸின் வடக்கு வாசல் உள்ளது.மதியம் 3 மணி வாக்கில் சென்று அடைந்தேன். 2.9கிலோமீட்டர்  வியாபித்திருக்கும் இந்த அரண்மனை longivity மலையும் kunming எனும் செயற்கை ஏரியை சுற்றி அமைக்கப்பட்ட பூங்காவோடு அமைக்கப்பட்டுள்ளது.இந்த longivity மலையின் மீது பல கட்டிடங்கள் எழுப்பியுள்ளனர்.1998இல் யுனேஸ்கோ இதனை உலக பாரம்பரிய களங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.மலையில் அமைந்துள்ள ஒவ்வொரு கட்டிடங்களாக பார்த்துவிட்டு எதிர் பக்கமாக இறங்கும் போதே kunming ஏரி தெரிந்தது.குளிர் எப்படியும் 4அல்லது 5டிகிரி செல்சியஸ் ஆவது இருக்கும்.ஏரி உறைந்திருந்தது.முழுவதும் பொறுமையாக பார்க்க குறைந்து அரை நாளாவது வேண்டும்.இப்பொழுதே சூரியன் அஸ்தமனத்துக்கு தயாரானது போல் இருந்தது.குளிர் காலத்தில் சீக்கிரமாகவே இருட்டிவிடுகிறது.வேகமாக ஏரியை சுற்றி அரை வட்டம் அடித்து மீண்டும் வந்த வழியிலேயே திரும்பலாம் என நினைத்தேன். அரை வட்ட வழியில்தான் கிழக்கு வாசல் இருந்தது.இருந்தாலும் வந்த வழி தெரிந்த வழிதானே என முடிவு செய்தேன்.மற்றவர்கள் எல்லாம் கிழக்கு வாசல் வழியே சென்று விட்டதனால் நான் மட்டும் தனியே அந்த சிறிய மலையை ஏறி இறங்க வேண்டும்.மணி கிட்டத்தட்ட 5 இருக்கும்.இருட்ட ஆரம்பித்துவிட்டது.ஆள் அரவம் இல்லை. வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க, இரண்டு மூன்று முறை வழி தவறி ஓட்டமும் நடையுமாக சூரியன் முழுவதும் மறைவதற்கு முன்னர் ஒரு வழியாக வாசலை அடைந்துவிட்டேன்.பின் ஸ்டேஷன் சென்று அங்கு இருந்து ரயிலில் ரூம்க்கு சென்று விட்டேன்.அறையில் சீனப்பெண் மட்டும் இருந்தாள்.இன்சூரன்ஸ் கம்பனியில் வேலை செய்கிறாளாம்.ஷாங்காய்யிலிருந்து வேலை விஷயமாக வந்திருக்கிறாள்.1 வாரம் இருப்பாளாம்.ஆங்கிலம் நன்றாக பேசினாள்.சீனர்களுக்கு ஆங்கிலம் தெரியாதது மிகப்பெரும் குறை என்று நம்புகிறாள்.இரவில் ஹாஸ்டல் cafeteria விலேயே இரண்டு பீரும், சிக்கன் ரைசும் சாப்பிட்டு விட்டு தூங்கப்போய்விட்டேன். மறுநாள் சீனப்பெருஞ்சுவர் போவதாகத் திட்டம்.

DSCN1374சீனாவில் கூகிள்,கூகிள் மேப்,ஜிமெயில்,பேஸ் புக்,யூ டியூப்,ட்விட்டர்,போர்ன் வலைத்தளங்கள் என மனிதன் உயிர் வாழ தேவையான அனைத்து வலைதளங்களையும் தடை செய்திருக்கிறார்கள்.அதற்காக சுபிட்சமாக வாழ்கிறார்கள் என எண்ணவேண்டாம்.இவை எல்லாவற்றுக்கும் சைனீஸ் மாற்று வைத்துள்ளார்கள்.எனக்கு தெரிந்தவரை மஞ்சள் இனத்தவர்கள் தான் உலகில் அதிக நேரம்  மொபைலை நோண்டிக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்.எங்கேயும் எப்போதும் மொபைலை தான்  கொண்டிருக்கிறார்கள்.எனவே சீனாவில் பயணம் போகிறீர்கள் எனில் முதலிலேயே எல்லாவற்றையும் குறிப்பெடுத்து விட்டு செல்வது நல்லது. நான் ஓரளவு எடுத்து வைத்திருந்தேன்.சீனப்பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்று.கிழக்கு மேற்காக விரிந்துள்ள இந்த சுவர் தொடர்ச்சியாகவும் கிளைகளாகவும் மொத்தம் 21196 கிலோமீட்டர் நீண்டுள்ளது.முதலாவதாக கிமு  ஏழாம் நூற்றாண்டில் அங்கங்கே கட்ட ஆரம்பித்து,அதன் பின் பிறகு வந்த பல மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் தேவை சீனாவுக்கு வெளியே வடக்கு பகுதியில் இருந்த வரும் படையெடுப்பகளில் இருந்து காப்பது. முக்கியமாக குதிரைப்படை.வான்வெளி போர்முறைக்குப்பிறகு இந்த சுவர் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டது.இப்பொழுது சுவரின் பெரும்பாலான பகுதி சேதமடைந்த நிலையிலேயே உள்ளன.சில இடங்கள் மட்டும் பயணிகளுக்காக மறு சீரமைப்பு செய்துள்ளார்கள்.நான் செல்லவிருந்தது Mutianyu பகுதி சுவர்.பெய்ஜிங்கில் இருந்து 70கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த பகுதி சுவர். காலை 7 மணிக்கு கிளம்பி Dongzhimen சப் வே ஸ்டேஷன் சென்று அங்கிருந்த மெக் டொனால்டில் காலை உணவை முடித்து விட்டு, அதற்கு மிக  அருகில் இருந்த Dongzhimen பஸ் ஸ்டேஷன் இருந்து 916 எக்ஸ்பிரஸ் பஸ் பிடித்தேன்.சரியாக ஒரு மணிநேரத்தில் Huairou Beidajie(12CNY) பஸ் ஸ்டேஷன் ஐ அடைந்தேன்.பின் அங்கிருந்து டாக்ஸி (60 CNY)  பிடித்து 15 நிமிடத்தில் Mutianyu சுவருக்கு காலை 11 மணிக்கு சென்று சேர்ந்தேன்.இந்த பகுதியின் சுவர் மலைமீது அமைந்துள்ளது.கீழிருந்தது மேலே ரோப் காரில் கூட்டிச்  சென்றார்கள்.இது நான் பார்க்கும் எனது இரண்டாவது உலக அதிசயம்.முதலாவது தாஜ்மஹால்.சென்ற ஆண்டு சென்று பார்த்தேன்.பனிக்காலம் என்பதால் மலைமீதிருந்த அனைத்து செடிகளும் காய்ந்து மொத்த மலையும் சுவருடன் சேர்ந்து  ஒரே களிமண் நிறத்தில் இருந்தது.கையுறையை மறந்து வந்துவிட்டேன்.எனவே கொண்டு வந்த selfie stickஐ பயன்படுத்த முடியவில்லை.பயங்கர குளிர்.கையை ஜாக்கெட் பைக்குள் வைத்துக்கொண்டேன். 2கிலோமீட்டர் வரை சுவர் சீரமைக்கப்பட்டு பயணிகளை அனுமதித்திருந்தார்கள். அதற்கு அப்பால் சுவர் சேதமடைந்திருந்தது. சுவர் மலை மீது ஏறிச்சென்றது.இரண்டு கிலோமீட்டரும் நடந்து சென்று அனுமதித்திருந்த உச்சி வரை சென்றேன்.எல்லோரும் அது வரை சென்றார்கள். உச்சியில் ஒரு வயதான பெண் குளிர் பானங்கள், பீர், பல நாடுகளின் கொடிகள் வைத்து விற்றுக்கொண்டிருந்தாள்.சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு பின் இறங்கி வந்தேன்.நான்கு மணி நேரம் அங்கு உலவி கொண்டு இருந்தேன். பொதுவாக பயணத்தின் போது அத்தியாவசியம் இல்லை எனில் மதிய உணவை தவிர்த்து விடுவேன்.கையில் ஒரு தண்ணீர் கேன் தான் வைத்திருந்தேன்.குளிரில் அவ்வளவு தாகம் ஏற்படவில்லை.மாலை 5 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு, வந்த மாதிரியே டாக்ஸி,பஸ்,ட்ரெயின்  என ரூமை 5 மணி அளவில் வந்தடைந்தேன். ரூமில் இருந்த அந்த இரண்டு ரஷ்யர்களும் வெளியேறி இருந்தார்கள்.அதற்கு பதில் புதியதாக ஒரு ரஷ்யப்  பெண்ணும், மற்றொரு சீனனும் வந்திருந்தார்கள்.ரஷ்யப் பெண் சிறிது நேரத்தில் எங்கோ வெளியே சென்று விட்டாள். அவள் வந்த பின்பு அவளிடம் என்ன பேசலாம் என்று தயார் செய்து வைத்து நள்ளிரவு அவள் வருவதற்குள் இரண்டு பீரும் சிக்கன் ரைஸும் சாப்பிட்டு விட்டு தூங்கிவிட்டேன்.மறுநாள் காலை பெய்ஜிங் சவுத் ஸ்டேஷனில் இருந்து 9 மணிக்கு எனக்கு ஷாங்காய்க்கு ட்ரெயின்.

(மேலும்  பயணிப்போம் ..)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s