சீனப்பயணம் – 3

காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி 7.30 மணி வாக்கிலேயே பெய்ஜிங் சவுத் ஸ்டேஷனை அடைந்து விட்டேன்.ஸ்டேஷன் உள்ளேயே காலை உணவை முடித்துவிட்டு ரயில் ஏறி விட்டேன்.புல்லட் ட்ரெயின்.பெய்ஜிங்கும் ஷாங்காய்க்கும் இடையே உள்ள தொலைவு 1318கிலோமீட்டர்.5 மணி நேரத்தில் அடைந்து விடலாம்.மணிக்கு 300கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது.சரியாக 9 மணிக்கெல்லாம் ரயிலை எடுத்து விட்டான்.பெய்ஜிங்கை தாண்டியவுடனே பனிமூட்டத்தை பார்க்க முடிந்தது.தூசுடன் கூடிய பனிமூட்டம்.அந்த இடத்தில் சுற்றுசூழல் மாசுபட்டிருந்தது தெளிவாக தெரிந்தது.நிறைய தொழிற்சாலைகள் இருக்கும் போல.இரவு பனிப்பொழிவும் இருந்திருக்கும் போல.நிலமெங்கும் வெண்பனியை காண முடிந்தது.Jinan west ஸ்டேஷன் வரை இது தான் நிலைமை.செல்லும் வழியெல்லாம் ஒரே மாதிரியான உயர்ந்திருந்த இருபது மாடி முப்பது மாடி கட்டிடங்கள் வந்து கொண்டே இருந்தன.இது Dredd படத்தில் வரும் Mega city oneஇன் அமைப்பை நினைவு படுத்தியது.சரியாக மதியம் 1.45கெல்லாம் ஷாங்காயை அடைந்துவிட்டது.ஷாங்காய் சீனாவின் வர்த்தக தலைநகரம்.மக்கள் தொகை அதிகமான நகரங்களில் சீனாவில் முதலிடம். உலகில் 3வது இடம்.எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய கட்டிடங்கள்.பெய்ஜிங்கோடு ஒப்பிடும் போது cost of living அதிகம் தான்.எனது திட்டத்தின்படி இங்கு ஒரு இரவு தங்குவதாக முடிவு.சீனா பயணம் திட்டமிட்டபோது பெய்ஜிங் மட்டும் தான் கணக்கில் இருந்தது. எனவே போய் வர டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டேன்.cheap.so non -refundable.பின்தான் புல்லட் ட்ரெயினில் பயணம் செய்யலாம்,பல இடங்களை பார்க்கலாம் என்று முடிவெடுத்து இறுதியில் தான் ஷாங்காய் புக் செய்தேன்.

DSCN1433

Shanghai Hongqiaoஇல் ரயில் நிலையமும்,ஏர்போர்ட்டும் ஒரே வளாகத்துக்குள்ளேயே இருந்தது.ஷாங்காய்யில் ஒரு நாள் தான் என்பதால் சரி எப்போ பார்க்கப்போகிறோம் என்று 5ஸ்டார் ஹோட்டலில் அறை பதிவு செய்திருந்தேன். இதைத்தான் பொச்சுக்கொழுப்பு என்பார்கள்.Hotel shanghai hangpou.டிசம்பர் சீனாவில் offseason என்பதால் ஆஃபர் இருந்தது.ஒரு இரவுக்கு CNY 500.இந்திய மதிப்புக்கு 5000ரூபாய்.பெய்ஜிங்கில் நான் தங்கியிருந்த ஹாஸ்டெலில் ஏழு நாட்களுக்கே 320CNY தான் கொடுத்திருந்தேன். ஸ்டேஷனில் இருந்து ஹோட்டலுக்கு டாக்ஸியில் செல்லலாம் என்று திட்டம் இருந்தது.ஆனால் ஹோட்டல் இருக்கும் இடம் எவ்வளவு தூரம் என்று தெரியவில்லை.ஹோட்டல் புக் செய்த போது காரில் 10 நிமிட தூரம் தான் இருந்ததாக ஞாபகம்.ஸ்டேஷன் உள்ளேயே சில டாக்ஸி டிரைவர்கள் நின்றிருந்தார்கள்.ஒருவனிடம் விலை கேட்டேன்.கையில் இருந்த மேப்பில் இங்கு செல்ல வேண்டும் என்று ஒரு இடத்தைக் காட்டி 170CNY ஆகும் என்றான்.1700ரூபாயா? 1CNYக்கு தோராயமாக 10ரூபாய் என்பதால் மனதுக்குள் கணக்கிட்டு கொள்வது எளிதாக இருந்தது.இந்த ட்ரிப்பின் முதல் மூன்று நாட்கள்,அதாவது ஷாங்காய்யிலிருந்து திரும்பி பெய்ஜிங் செல்வது வரை சிக்கனமாக இருக்க வேண்டும் என்பது திட்டம்.முக்கிய காரணம் இந்த 5ஸ்டார் ஹோட்டல் புக்கிங் தான்.மேலும் மசாஜ் போகலாம் என்ற எண்ணமும் தான்.இது வரை 5ஸ்டார் ஹோட்டலில் தங்கியது இல்லை.டேக்ஸ்,லொட்டு லொசுக்கு என்று போட்டு எக்கு தப்பாக பில் போட்டார்கள் என்றால் என்ற பயம்.புக்கிங்கின் போது பணம் செலுத்தவில்லை.தங்கும் போது கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். கிரெடிட் கார்டு இருந்தது.ஆனால் பேலன்ஸ் கம்மியாகத்தான் இருந்தது.ஆனால் நூறு சதவீதம் இதை நம்ப முடியாது.எங்காவது முக்கியமான நேரத்தில் இழுக்கும் போது தான் பல்லிளிக்கும்.தொழிநுட்பத்தை முழுக்க முழுக்க நம்புபவன் இல்லை நான்.விமானத்தில் பல முறை பயணம் செய்திருந்தாலும் இப்பொழுதும் ஒவ்வொரு முறையும் சந்தேகத்தோடும், பயத்தோடும்தான் பயணிக்கிறேன்.ரன் வேயில் இறக்குவானா இல்லை நடுக்கடலிலேயே இறக்கிவிடுவானா என்று.அவ்வளவு உயரத்தில் எந்த நம்பிக்கையில் ஒரு மெஷினை நம்பி பயணிக்கிறோம்?இந்தியாவில் தொழில்நுட்பத்தின் மீது நமது அனுபவம் அவ்வளவு மோசமானது.ஆனால் நம்மூர் பெண்கள்  சந்தேகம் கொள்வதில்லை.நம்பி ஏறி உட்கார்ந்து விடுகிறார்கள். ஹோட்டலின் தூரம் பற்றி இன்டர்நெட்டில் பார்க்கலாம் என்றாலோ அல்லது போன் செய்து கேட்கலாம் என்றாலோ என்னிடம் இருப்பதோ இந்தியன் சிம் மட்டும் தான்.Payphoneஐ ஷாங்காய் ஸ்டேஷன் அரைவல் பகுதி முழுக்க தேடிப்பார்த்தும் காணும். ஸ்டேஷன் இருந்த இடம் ஊருக்கு வெளி போல தெரிந்தது.உள்ளேயே ஒரு மணி நேரம் அங்கும் இங்கும் அலைந்து விட்டு போனால் போகிறது என்று டாக்ஸி ஸ்டான்ட் வந்தேன்.டாக்ஸிக்காக பெரிய வரிசை நின்றிருந்தது.வரிசையாக டாக்ஸிகள் வர, வரிசை  வேகமாக காலியாகிக்கொண்டிருதது.மீட்டர் டாக்ஸிதான்.கையில் இருந்த சைனீஸில் ஹோட்டல் அட்ரஸ் எழுதி இருந்த காகிதத்தை காட்டி உட்கார்ந்துவிட்டேன்.சரியாக 20 நிமிடத்தில் ஹோட்டலுக்கு சென்று விட்டேன்.45CNY.பரவா இல்லை.

ஹோட்டல் ரிசெப்ஷனில் புக் செய்திருந்த சீட்டைக் காட்டினேன்.செக் செய்து பார்த்து விட்டு ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார்கள்.520CNY அறை வாடகை 1000CNY அட்வான்ஸ்.மொத்தம் 1520CNY கொடுக்க வேண்டும்.checkoutஇன் போது 1000CNYயை திருப்பி தந்து விடுவார்களாம்.கிரெடிட் கார்டு பேலன்ஸ் உடன் சேர்த்து மொத்தம் இருந்த பணத்தில் முக்கால்வாசியை கேட்கிறார்கள்.வேறென்ன செய்ய.கிரெடிட் கார்டில் இருந்து 520CNYயும் கையில் இருந்த 1000CNYயும் கொடுத்தேன். ஒன்பதாம் மாடியில் அறை.5ஸ்டார் ஹோட்டல் என்பதால் ஜிம்,ஸ்பா,வார்ம் வாட்டர் ஸ்விம்மிங்பூல் எல்லாம் இருந்தது.அறையும் 5000ரூபாய்க்கு ஏற்ற அறைதான்.அறையில் மிகவும் பிடித்திருந்தது பாத் டப்  தான்.பாத் டப்பில் படுத்து கொண்டு கண்ணாடி ஜன்னல் வழியாக ஷாங்காய்யை வேடிக்கை பார்க்கலாம்.வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நான் குளிப்பது தெரியுமா என்று தெரியவில்லை.எனவே ஜாக்கிரதையாகத்தான் ஜலக்கிரீடம் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஓய்வெடுத்த பிறகு ஹோட்டலை சுற்றிபார்த்துவிட்டு 5மணி அளவில் The Bundக்கு செல்ல முடிவெடுத்து டாக்ஸி பிடித்தேன்.ஷாங்காய்யிலும் நல்ல குளிர்.2டிகிரியாவது இருக்கும்.TheBund என்பது huangpu நதியின் ஓரம் அமைத்திருக்கும் வரிசையான கட்டிடங்கள் அமைந்திருக்கும் இடம்.இரவில் அந்த பகுதியே மின்னுகிறது.ஒரு இரண்டு மணிநேரம் அங்கேயே சுற்றிவிட்டு அருகில் இருந்த ஒரு சிறிய கடையில் 3பீரும் ஸ்னாக்ஸ்சும் வாங்கிக்கொண்டு திரும்ப ஹோட்டல் சென்று விட்டேன்.பாத் டப்பில் மிதமான சுடுநீரை நிரப்பி அதில் படுத்துக்கொண்டு,கண்ணாடி வழியே ஷாங்காய்யை பார்த்த படி மூன்று பீர்களையும் 2 மணிநேரம் குடித்து முடித்தேன்.சீனர்கள் பெரும்பாலும் அனைத்து உணவிலும் சாம்பல் எனும் மீன் தூவலையோ அல்லது இனிப்பையோ சேர்த்துவிடுவார்கள்.பீருக்கு சைடிஷாக,பார்க்க காரச்சேவு போல் இருக்கும் ஒன்றை வாங்கினால் அதன் சுவையோ அச்சு அசல் அச்சுமுருக்கேதான்.12மணிவாக்கில் சாப்பிட்டாமலே தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை எழுந்ததே 11 மணிக்கு தான்.மறுபடியும் ஒரு மணிநேரம் பாத் டப்பில் என்னை ஊற வைத்துக்கொண்டேன்.5000 ரூபாயை முழுவதுமாக உபயோகப்படுத்தி விடவேண்டும் என்பதே எண்ணம்.செக் அவுட் நேரம் 12 மணி.சரியாக 12 மணிக்கு அறையை காலிசெய்து, கொடுத்திருந்த 1000cny  முன்பணத்தையும் வாங்கிக்கொண்டேன்.2 மணிக்கு ரயில்.ஷாங்காய் ரயில் நிலையத்திலேயே brunchஐ முடித்துக்கொண்டு ரயில் ஏறிவிட்டேன்.8 மணி வாக்கில் அறை  சென்று சேர்ந்துவிட்டேன். நல்லபடியாக இந்த பயணம் முடிந்தது.இனி வாயை வயிற்றை கட்ட தேவையில்லை.தாராளமாக செலவு செய்யலாம்.ஆனால் பணம் போதிய அளவு இல்லை.மசாஜ் வாய்ப்பேயில்லை.அறையில் கடலை போடலாம் என்று கனவு கண்டு வைத்திருந்த ரஷ்யப்பெண்ணும்  காலி செய்திருந்தாள்.இரு புதிய சீனர்கள் வந்திருந்தார்கள்.கொண்டு வந்திருந்த தனிமையின் நூறு ஆண்டுகள் என்ற புத்தகத்தை சிறிது நேரம் படித்து விட்டு தூங்கிவிட்டேன்.

மறுநாள் பெய்ஜிங் ஒலிம்பிக் ஸ்டேடியம் செல்வதாக திட்டம்.காலை 9மணி அளவில் சப் வே ட்ரெயின் பிடித்து “Olympic Green” ஸ்டேஷன் வந்தடைந்தேன்.ஸ்டேஷனுக்கு வெளிப்புறத்தில் தான் ஸ்டேடியம் அமைந்துள்ளது.  இந்த ஸ்டேடியம் 2008இல் நடந்த சம்மர் ஒலிம்பிக்ஸ்க்காக பிரத்யேகமாக கட்டப்பட்டது.2022இல் நடைபெறப்போகும் வின்டர் ஒலிம்பிக்ஸ்சும் இங்குதான் நடைபெற போவதாக உள்ளது.அவ்வப்போது போட்டிகள்,நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெரும்பாலும் இது சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளது.இதன் கட்டமைப்பு வெளியில் இருந்து பார்க்கும் போது பறவையின் கூடு போல அமைந்துள்ளது.இதன் எதிரேயே Beijing National Aquatics Center அமைந்துள்ளது.இந்த அரங்கம் நீச்சல் போட்டிக்காக அமைத்துள்ளார்கள்.  நீல நிறத்தில், கனசதுர வடிவில்,வெளிப்புற அமைப்பு பபுள்கள் போல பார்ப்பதற்கு ஒரு பிரம்மாண்ட வாட்டர் பெட் போல உள்ளது.இரண்டு அரங்கங்களும் எதிரெதிரே,ஒரு வளாகத்தில் அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகிறது போலும்.மிக பிரமாண்டமான பரந்த வெளியில் இரு அரங்கங்களும் அமைந்துள்ளது.நான் சென்ற போது அவ்வளவு பயணிகள் கூட்டம் இல்லை.முதலில் Beijing National Aquatics Center க்கு சென்றேன்.நான்கு மாடி உள்ள இந்த அரங்கில் தரைத்தளத்தில் இரு நீச்சல் குளங்கள் உள்ளன.இங்கு தான் போட்டிகள் நடைபெறும்.நான் சென்ற பொது குளத்தை மரப்பலகைகள்  போட்டு மூடி வைத்திருந்தார்கள்.பின் நேஷனல் ஸ்டேடியத்திற்கு சென்றேன்.ஸ்டேடியத்திற்கு வெளியே ஒரு சீனக்குடும்பம், ஒரு வயதான ஆண், ஒரு வயதான பெண்,ஒரு நடுவயது ஆண்,பெய்ஜிங்கிற்கு வெளியே இருந்து வந்து இங்கு வேலை பார்ப்பவர்களாக இருக்கும் என நினைக்கிறேன், என்னிடம்  சீன மொழியில் என்னைக்காட்டி, அவர்கள் மொபைலைக்காட்டி,ஏதோ சொன்னார்கள்.என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டுமாம்.என்னையும் ஒரு பாரினரா மதிச்சு.. சகல சௌபாக்கியத்துடன் வாழட்டும் அக்குடும்பம். தனித்தனியாகவும்,மொத்தமாகவும் எல்லோருடன் சேர்ந்து,போட்டோ எடுத்துக்கொண்டேன். டிசம்பர் மாதத்தில் நேஷனல் ஸ்டேடியத்தில் ஐஸ் ஸ்கேட்டிங் நடக்கும் என்று வாசித்திருந்தேன்.ஆனால் ஒன்றும் இல்லை.போட்டிகள் நடக்கும் இடங்களில் பனிக்கட்டிகளை உடைத்து பரப்பிக் கொண்டிருந்தார்கள். போட்டோக்கள் மட்டும் க்ளிக்கிக்கொண்டேன்.மணி மதியம் 1.வெளியே வந்து சப் வே நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

DSCN1482

அடுத்து செல்ல முடிவெடுத்தது Temple of Heaven செல்ல.Tiantandongmen ஸ்டேஷன் சென்றேன்.ஸ்டேஷனுக்கு மிக அருகிலேயே இருந்தது Temple of Heaven.சுமார் 2.78கிலோமீட்டர் பரப்பளவுள்ள இது  The Hall of Prayer for Good Harvests(நல் அறுவடைக்கான வழிபாட்டு  மண்டபம்),The Imperial Vault of Heaven(சொர்கத்தின் கூரை,சொர்கத்தின் பேரரசு பெட்டகம் ?? அட போங்கப்பா),Circular Mound Altar(பலிமேடு) என்று மூன்று தனி பகுதிகளையும்,பூங்காவையும் உள்ளடக்கியுள்ளது. சீனப்பேரரசர்கள் தங்களை சொர்கத்தின் புதல்வன் என்றும்,சொர்கத்தின்  பிரதிநிதியாக தாம் உலகை ஆள்வதாகவும்  நம்பினார்கள். எனவே சொர்க்கத்திற்கு நன்றி கூறும் பொருட்டும், நல் அறுவடைக்கான வானிலை வேண்டியும் Qing மட்டும் MIng ராஜவம்சத்தினர் வருடத்திற்கு இருமுறை இங்கு வழிபாடு நடத்துவார்கள்.பலிமடையில் எருதுகளை சொர்கத்திற்கு பலி கொடுப்பார்கள்.மூன்று பகுதிகளையும் பார்த்து விட்டு பூங்காவை சுற்றி வந்தேன்.பெரும்பான்மை உள்ளூர் கார்கள்.மத்திய வயதுடைய சிலர் வாயில் சிகரெட் வாய்த்த படி தாயக்கட்டம் போன்று ஏதோ ஆடிக்கொண்டிருந்தார்கள். சூதாட்டம் போலும். நான் சென்ற அனைத்து பூங்காக்களிலும் இது போன்ற ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது.விளையாடுபவர்களின் வயதும் முகமும் கூட ஒரே போல் தான் இருக்கின்றன. சிலர் ஓட்டம் சென்று கொண்டு இருந்தார்கள்.சிலர் ஒரே ரிதத்தில் கைதட்டிக் கொண்டிருந்தார்கள்.அங்கு சுற்றிப் பார்த்து விட்டு வெளியே வந்தேன். ஸ்டேஷன் அருகிலேயே Hongquao Pearl மார்க்கெட் இருந்தது. சீனா வந்த ஞாபகத்துக்கு ஏதேனும் வாங்கி செல்லலாம் என்று நினைத்தேன்.இந்த மார்க்கெட்டை ஏற்கனவே குறிப்பு எடுத்து வைத்திருந்தது தான்.Hongquao Pearl ஒரு காம்ப்ளெக்ஸ்.4 தளம்.தரை தளத்தில் எலக்ட்ரானிக்,கிப்ட் சாதனங்களும்,முதல் தளத்தில் உடைகளும், பொம்மைகளும்,மூன்றாம் தளத்தில் லெதர் சாமான்களும், நான்காவது தளத்தில் முத்துக்களும் விற்பனை செய்தார்கள்.சீனாவில் எல்லாம் சீப்பாக இருக்கும் என்றுதான் நானும் நினைத்தேன்.ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.அங்கு போட்டிருந்த விலையை பார்த்தால் எக்கு தப்பாக இருந்தது.பேரம் பேசித்தான் வாங்க வேண்டும்.உதாரணமாக முதலில் சொல்லும் விலை 300CNY என்றால் 50CNYக்கு வாங்கலாம். அப்படி வாங்கும் விலையும் தோராயமாக நம்மூர் விலைதான்.சீப் என்பதை என்ன அர்த்தத்தில் சொல்லலாம் என்றால் ஒரிஜினல் போல உள்ள டூப்ளிகேட்டை ஒரிஜினலை விட கம்மியான விலைக்கு வாங்கலாம்.மற்றபடி சீப் என்றால் Yiwu மார்க்கெட் போன்ற wholesale மார்க்கெட் சென்று கண்டைனர் நிறைய வாங்கினால் தான் சரி.பெய்ஜிங்,ஷாங்காய் போன்ற மாநகரங்களில் சீப் ஆக வாங்க முடியாது.நான் Teracotta வீரனின் ஒரு மண்பொம்மையும், சீனப்பெண்களின் ஓவியங்கள் வரைந்திருந்த ஒரு படத்தையும் வாங்கிக்கொண்டேன்.5மணி அளவில் சப் வே பிடித்து ரூம் வந்து சேர்ந்தேன்.5.30 மணிக்கே இருட்டிவிட்டது.

DSCN1502

இரவில் Houhai bar ஸ்ட்ரீட் செல்லலாம் என நினைத்தேன்.இந்த பார் ஸ்ட்ரீட் Shichahai ஏரியை நோக்கி அமைந்துள்ளது.Nightlifeக்கு புகழ்பெற்றது.ரெஸ்டாரண்ட், பார் போன்ற கடைகள் தான்.மற்ற சமாச்சாரங்கள் எல்லாம் கிடையாது.எனது ஹாஸ்டெலில் இருந்து இரண்டரை கிலோமீட்டர்.மெயின் ரோடு வழியாகத்தான் போகவேண்டும்.நடந்தே சென்றுவிட்டேன்.பார் ஸ்ட்ரீட் வெறிச்சோடி இருந்தது.சில பேரை மட்டும் காண முடிந்தது.ஆப் சீசன். எனது எண்ணம் அங்கு சென்று பீரூம், பெய்ஜிங் வாத்துக்கறி சாப்பிடலாம் என்பது .பெய்ஜிங் வாத்துக்கறி பிரபலம்.ஆனால் கடைகள் இருந்தாலும்,குறைந்த ஆட்கள் தான் இருந்தார்கள்.நேரம் ஆக ஆட்களும் குறைந்து விடுவார்கள்,குளிரும் அதிகமாக ஆகிவிடும்.ஏற்கனவே பயங்கர குளிர்.எனது ஹாஸ்டல் பக்கத்திலேயே நிறைய சீன கடைகள் இருந்தன.சரி அங்கு சென்று சாப்பிட்டு கொள்ளலாம் என முடிவெடுத்து,அந்தத்தெருவை மட்டும் ஒரு சுற்று சுற்றி வந்து விட்டு ஹாஸ்டலை நோக்கி நடந்தேன்.நாள் முழுக்க நடந்தது.கால் வலி.மேலும் முதுகு வலி.அருகில் இருந்த சப்வே ட்ரைனை பிடித்து எனது ஹாஸ்டல் அருகில் இருந்த சப்வே ஸ்டேஷனை அடைந்தேன்.ஸ்டேஷனில் இருந்து ஹாஸ்டல் வரை உள்ள ஒவ்வொரு ரெஸ்டாரண்ட் அனைத்தையும் நோட்டம் மிட்டு கொண்டே சென்றேன்.எல்லா ஹோட்டலில் சீன மொழியில் தான் எழுதி இருந்தார்கள்.ஒரு ரெஸ்டாரண்டுக்கு வெளியே படம் போட்டு பெய்ஜிங் டக் என்று ஆங்கிலத்தில் எழுதி போட்டிருந்தார்கள்.உள்ளே நுழைந்து விட்டேன்.ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அவருக்கு ஒரு attitude இருக்கும்.தனக்கு சம்மந்தமே இல்லாத இடத்தில் கூலாக  நுழைவார்.என்னை நானே ஜேம்ஸ் பாண்டாகவே நினைத்து கொண்டேன். உள்ளே சில சீனர்களும், இரு வெள்ளைக்காரிகளும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.  மெனுவை வந்து நீட்டினான்.நல்லவேளை மெனுவில் படங்களுடன் ஆங்கிலத்திலும் எழுதி இருந்தார்கள்.விலை கொஞ்சம் அதிகம் தான்.இரண்டு பீரும், பெய்ஜிங் டக் ப்ரையும் ஆர்டர் செய்தேன்.டக் ப்ரை தட்டு நிறைய கொண்டுவந்தான்.தொட்டு கொள்வதற்கு இட்லிப்பொடி போல் ஒன்று கொடுத்தான்.வாத்தை எண்ணெய் இல்லாமல் தீயில் வாட்டி இருந்திருப்பார்கள் போல.அவ்வளவு ஒன்றும் சரியில்லை.இரண்டு பீருடன் வாத்துக்கறியை சாப்பிட்டு முடித்தேன்.பில்லைக் கொடுத்து விட்டு ரூமுக்கு சென்றேன்.சீனா பெண்ணின் இடம் காலியாக இருந்தது.காலி செய்து விட்டால் போல.ஒரு வாரமாக இருப்பதாக சொல்லி இருந்தாள்.என்னவென்று தெரியவில்லை.சிறிது நேரம் புத்தகம் படித்து கொண்டிருந்துவிட்டு தூங்கிவிட்டேன்.

(மேலும் பயணிப்போம்…)

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s