இந்தியப்பயணம் எச்சரிக்கை

இன்று காலை இந்த செய்தியை படித்துவிட்டு காலையில் இருந்து கோபத்துடன் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.ஜெர்மனியில் இருந்து மகாபலிபுரம் சுற்றுலா வந்த பெண்ணை மூன்று பேர் பலாத்காரம் செய்துள்ளார்கள்.[ பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் தாய்நாடு செல்வதற்காக பயணசீட்டு முன்பதிவு செய்ததாகவும் அவர் தாய்நாடு சென்றால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால், குற்றவாளியை பிடிக்க ஒத்துழைப்பு தரும் வகையில் சில நாட்கள் தங்கியிருக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.ஆனால், தான் கடும் மன உளைச்சலில் தவிப்பதாகவும் எனவே உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என விரும்புவதாகவும் […]

அடுத்த பயணம்

2015இல் மலேசியாவில் இருந்து வேலையை விட்டு இந்தியா வந்தவுடன் வட இந்தியாவில் ஒரு சுற்றுபயணம் சென்று வந்தேன்.எனது முதல் பெரும் பயணம்.மலேசியாவிலிருந்து கிளம்புவதற்கு முன் நானும் எனது சகபாடியும் 4 நாட்கள் கோவா செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம்.இந்தியா வந்தபிறகு கடைசி நேரத்தில் சகபாடி ஜகா வாங்க ஒரு வேகத்தில் அடுத்த வாரத்திற்கு ஜெய்ப்பூருக்கு ரயிலில் முன் பதிவு செய்து விட்டேன்.அப்போது நாங்கள் இருந்தது சிவகாசியில் .வீட்டில் நண்பனின் கல்யாணத்திற்கு செல்கிறேன், ஒரு வாரத்தில் திரும்பி வந்து […]