இந்தியப்பயணம் எச்சரிக்கை

இன்று காலை இந்த செய்தியை படித்துவிட்டு காலையில் இருந்து கோபத்துடன் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.ஜெர்மனியில் இருந்து மகாபலிபுரம் சுற்றுலா வந்த பெண்ணை மூன்று பேர் பலாத்காரம் செய்துள்ளார்கள்.[ பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் தாய்நாடு செல்வதற்காக பயணசீட்டு முன்பதிவு செய்ததாகவும் அவர் தாய்நாடு சென்றால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால், குற்றவாளியை பிடிக்க ஒத்துழைப்பு தரும் வகையில் சில நாட்கள் தங்கியிருக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.ஆனால், தான் கடும் மன உளைச்சலில் தவிப்பதாகவும் எனவே உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்]. அந்த பெண்ணின் மனநிலையை என்னால் நன்றாக புரிந்து கொள்ளமுடிகிறது.பொதுவாக பயணத்தில் ஏதேனும் தவறு நடந்து விட்டால் பயண மனநிலை சுத்தமாக போய்விடும்.பெரிய தவறாக இல்லை சில சிறிய தவறே போதும்.உதாரணமாக செல்போன் தொலைந்து விட்டாலோ அல்லது சிறியதாக  ஏமாற்றப்பட்டாலோ கூட போதும். எனக்கு இரவில் இடியுடன் கூடிய மழை வந்தால் கூட போதும்.அதிலும் தனியாக பயணம் செய்யும் போது இது போன்ற நிகழ்வுகள் நம் மீதே நமக்கு கோபத்தை வரவழைத்து விடும்.மூடிட்டு வீட்லயே இருந்திருக்கலாம் என்பது போல. இந்த தே.. பசங்க கற்பழித்திருக்கிறார்கள்.

நாள் முழுதும் அந்த பெண்ணை தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இனி பயணம் செய்வதை நினைத்து கூட பார்க்க மாட்டாள். இந்தியாவை பற்றி என்ன எண்ணுவாள்.இந்தியா, பெண்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறோம்.எந்த எண்ணத்தில் இந்தியா வர நினைத்திருப்பாள்.பொதுவாக வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வர விரும்புவதில்லை.முக்கிய காரணம் பாதுகாப்பு இல்லை என்பது தான். என்னைக்கேட்டால் நானும் அதையே தான் சொல்வேன். பாதுகாப்பு இல்லை.முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு கிடையவே கிடையாது. மீறி வருபவர்கள் பெரும்பாலும் இந்தியாவை தேர்தெடுப்பதற்கு காரணம் cheap destination என்பது தான்.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மிடில் கிளாஸ் அல்லது அதற்கும் கீழ்.ஆறு மாதமாகவோ ஒரு வருடமாகவோ வருமானத்தில் பயணத்திற்காக சேர்த்து வைத்து ஒரு மாதம் இரு மாதம் விடுமுறை எடுத்து வந்திருப்பார்கள்.நாளுக்கு 200 அல்லது 300 ரூபாய் வாடகைக்கு ஹோஸ்டேலில் தங்கி இருப்பார்கள். எல்லா இடங்களிலும் அந்த பெண்கள் சீண்டல்களை சந்திக்க நேரிடும். ஜெயமோகன் சொல்வது போல் இந்தியா பயணம் செல்ல இனிமையான நாடெல்லாம் இல்லை.எல்லாவிதமான ஏமாற்றத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.நம்ப வில்லை என்றால,  இணையத்தளத்தில் நிறைய வெளிநாட்டினர் ட்ராவல் பிளாக் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.அங்கு சென்று வாசித்து பாருங்கள்.எனக்கே இந்தியாவில் பயணம் செய்யும் வெளிநாட்டு பெண்களை பார்க்கும் போது இவள் பத்திரமாக ஊர் போய் சேரவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன். இந்த மனநிலை எப்படி எனக்கு உருவானது என்று தெரியவில்லை.ஒரு முறை கோவாவில் என்னுடன் தங்கி இருந்த ஒரு ஜெர்மன் பெண்ணுடன் சேர்ந்து இரவு கடற்கரையோரம் உலாவப் போனோம்.ஆளில்லா கடற்கரை, இரவு, நிலா, பீர் என்று ரொமான்டிக் ஆன சூழ்நிலை.ஆனால் அந்த நேரத்தில் என் மனநிலை, யாரேனும் வந்து  இந்த பெண்ணை ஏதேனும் செய்து விட்டார்கள் என்றால் என்ற பயம் மட்டும் தான்.அவளுக்கு எந்த வித பயமும் இருந்தது போல் தெரியவில்லை. நம் நாட்டின் பாதுகாப்பின்மை எனக்கு நன்றாக தெரிகிறது.

இந்தியாவில் tourism என்னை பொறுத்த வரை மிக மிக கேவலமான நிலையிலேயே உள்ளது.எந்த  ஒரு ஒழுங்கும் கிடையாது. பெரும்பாலும் உள்ளூர் மாபியாக்களின் கைகளிலேயே உள்ளது. இதை ஒழுங்கு படுத்தி பயணிகளுக்கு ஆவன செய்து கொடுத்தால் போதும்.அரசாங்கத்துக்கும், உள்ளூர்காரர்களுக்கும் நல்ல வருமானம் வரும். அரசு tourism கண்டு கொள்வது போல் தெரியவில்லை. you have to raise your voice to things get done in india என்று ஒரு ஆஸ்திரேலியா பெண் சொன்னாள்.

முகப்புத்தகத்தில் சிலர் ‘கற்பழிப்புக்கு தண்டனை அதை வெட்டி எரிய வேண்டும்.ஆமோதித்தால் லைக் செய்யுங்கள்’ என்று பதிவிடுவார்கள்.பெரும்பாலும் படித்து விட்டு கடந்து விடுவேன்.ஆனால் இப்போதெல்லாம் தோன்றுகிறது ஆம் அது தான் சரியான தண்டனையாக இருக்கும்  என்று. என்ன நினைப்பில் இதைச் செய்கிறார்கள். எப்படியும் தப்பித்து விடலாம் என்றா? அதுசரி. கற்பழித்தவர்களுக்காகவும், வெடிகுண்டு வைப்பவர்களுக்காகவும் மனிதாபிமானம் பேசுபவர்கள் இருக்கிறவரைக்கும் இவர்கள் கற்பழித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s