The Catcher in the Rye-ஒரு கழுவி ஊற்றல்

சில நாட்களாக வலைத்தளத்தில் பதிவிடவில்லை.எனது கோடான கோடி!! வாசகர்கள் மன்னித்தருளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.இப்போது வேலை செய்யும் கம்பெனியில் இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியேற தகவல் தெரிவித்து விட்டேன்.இங்கு மொத்தம் மூன்று மாதம் நோட்டீஸ் பீரியட்.இது கடைசி மாதம்.எனவே வேலை தேடி கொண்டிருந்தேன். அதனால் இன்டெர்வியூக்கு தயார் செய்ய வேண்டியது இருந்தது. இதுவும் ஒரு காரணம்.வேறொரு காரணம் சோம்பேறித்தனம் தான்.இந்த தளம் ஆரம்பிக்கும்போதே மாதம் மூன்று பதிவாவது இட நினைத்திருந்தேன்.ஆனால் கடந்த ஒரு மாதமாக இண்டெர்வியூவை சாக்காக வைத்து நழுவிவிட்டேன். இப்போது இந்தக் கம்பெனியில் இரண்டு மாதம் நீட்டித்துவிட்டார்கள். எனவே இந்த பதிவு.இந்த இடைவெளியில் “The Catcher in the Rye” என்ற புத்தகத்தை படித்து முடித்தேன்.வெகு நாட்களாகவே படிக்க வேண்டும் என்று வைத்திருந்த புத்தகம்தான்.பல, நூறு சிறந்த நூல்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.பீட்டில்ஸ் பாடகர் ஜான் லென்னானை சுட்டு கொன்றுவிட்டு கொலைகாரன் சம்பவ இடத்தில் கூலாக இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தானாம். இந்த புத்தகம்தான் என்னுடைய வாக்குமூலம் என்று கூறினானாம்.இப்படி இன்னும் இரண்டு கொலை முயற்சியில் இந்த நாவல் சம்பந்தப்பட்டுள்ளது.அப்படி என்னதான் இருக்கிறது இந்த நாவலில்.ஆயத்தமானேன்.யாரை கொலை செய்யலாம் .எங்கு துப்பாக்கி வாங்கலாம்.சரி படித்து விட்டு முடிவு செய்து கொள்ளலாம்.கொல்லலாம்.

எழுதியவர் J.D.Salinger. சிறிய புத்தகம் தான்.எளிய ஆங்கில நடை.மற்றபடி இந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.வயதடைதல்(Coming of age) வகை நாவல். கதை, ஏற்கனவே இரு முறை வேறுவேறு பள்ளிகளில் இருந்தது வெளியேற்ற பட்ட பதினாறு வயது ‘Holden Caulfield’ மோசமான கல்வி காரணமாக இந்த முறையும் பள்ளியிலிருந்து வெளியேற்றப் படுகிறான்.பள்ளியிலிருந்து இதை பெற்றோருக்கு தெரியப்படுத்தும் கடிதம் நான்கு நாட்கள் கழித்து தான் செல்லும்.அதற்குப்பின் பெற்றோருக்கு கோபம் தணிந்த பின் வீட்டிற்கு செல்லலாம் என்று முடிவெடுத்து நியூயார்க்(அவனது சொந்த ஊர்தான்) நகரில் மூன்று நாட்கள் பொழுதை கழிக்கிறான்.அப்போது நிகழ்வது ,அதில் ஏற்படும் மனமாற்றங்கள் இவற்றை கூறுகிறது இந்த நாவல். மூன்று நாட்களில் பெரிதாக ஒன்றும் நிகழவில்லை.ரூம்மேட்டிடம் வாயை கொடுத்து வாங்கிக்கட்டிக் கொள்கிறான்,மாமப்பையனிடம்(Pimp) அடி வாங்குகிறான், கேர்ள் ப்ரெண்டை அழ வைக்கிறான், பத்து வயது தங்கையை பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் சென்று பார்க்கிறான்.கடைசியில் தங்கையினால் மனம் மாறி வீட்டை விட்டு போகும் முடிவை மாற்றிக்கொள்கிறான்.குழந்தைகள் பெரியவர்களாகும் பொழுது அவர்களின் இன்னோசென்ஸையும், நேர்மையும் இழந்து விடுகிறார்கள் என்று Holden Caulfield’ நம்புகிறான்.எனவே கோதுமை வயற்காட்டில் பாறை உச்சியை நோக்கி ஓடி வரும் குழந்தைகளை உச்சியிலிருந்து கீழே விழாமல் பிடித்து நிறுத்துவதை விரும்புவதாக கூறுகிறான்.பாறை உச்சியில் இருந்து கீழே விழுவதை, குழந்தைகள் பெரியவர்கள் ஆவதோடு ஒப்பிடலாம்.(ஆன்மீக வீழ்ச்சியா?). குழந்தைகளை குழந்தைகளாகவே தடுத்து நிறுத்த விரும்புகிறான்.கதையின் மையக்கருத்து என்னவோ நன்றாக தான் இருக்கிறது.கதையின் நிகழ்வுகள் என்னை சுத்தமாக ஈர்க்கவில்லை.அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறை எனக்கு பிடிபடாமை கூட காரணமாக இருக்கலாம் அல்லது இன்னும் இலக்கிய பரிட்சயம் அவசியம் போலும்.மொத்தத்தில் நான் ஆங்கிலத்தில் படித்த ஆங்கில நாவல்கள் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பற்ற பிறமொழி நாவல்கள் ஒரு முப்பது இருக்கலாம்(இந்தியாவில் ஐஐடியன்கள் எழுதும் நாவல்களை கணக்கில் சேர்க்கவில்லை.).இதில் ‘The childhood of jesus’ நாவல் தவிர மற்ற நாவல்கள் பிடித்திருந்தது.”Zorba the greek”, “Sophie’s world” போன்றவை. சில பிடிக்கவில்லை என்றாலும் நமக்கு இலக்கிய அனுபவம் போதவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ’கடலும் கிழவனும்’. ஆனால் இந்த நாவல் சுத்தமாக ஏமாற்றத்தையே அளித்தது.இதுவும் என் குறையாகவே இருக்கலாம்.எவரேனும் படித்தவர்கள் அவர்களுக்கு எப்படி இருந்தது என்பதையும்  இந்த நாவலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் எழுதினால் நன்றாய் இருக்கும். ஒரு நாவல் புரியவில்லை என்று யாரேனும் சொன்னால், எத்தனை முறை படித்தீர்கள் என்று ஜெயகாந்தனோ,சுந்தர ராமசாமியோ கேட்பாராம்.ஒரு முறை நாவல் படித்ததெல்லாம் படித்ததாகவே கணக்கில் வராது.சரிதான்.ஆனால் இந்த நாவலை இன்னொரு முறை படிக்க சுத்தமாக எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை எதிர் காலத்தில் படித்தாலோ அல்லது முன்பே படித்திருந்தாலோ பிடிக்கலாம்,பிடித்திருந்திருக்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s