ஆந்திராஹாரு

இரண்டு பேர் எனக்கு ரூம்மேட்டாக வரவேகூடாது.ஒன்று இந்த பிரெஷர்(Fresher) குஞ்சுகள், இரண்டாவது ஆந்திரவாலாக்கள்.கடந்த இரண்டு வருடங்களாக பெங்களூரில் PGஇல் இரண்டு பேர் தங்கும் அறையில் தான் வசிக்கிறேன்.ஒரே அறைதான்.ரூம்மேட் மாறிக்கொண்டே இருப்பார்கள்.இதுவரை மொத்தம் ஏழு பேர் வரை மாறி விட்டார்கள்.என் அதிஷ்டத்திற்கு இரண்டு பேர்(ஒருவன் நம்மூர்தான்.இன்னொருவன் உத்திரபிரதேசம். இருவரும் ஒவ்வொரு மாதம் தான் இருந்தார்கள் ) தவிர வந்து சேர்ந்தவர்கள் எல்லாரும் ஆந்திரவாலாக்கள் தான்.  பிரெஷர் குஞ்சுகளை பொறுத்தவரை இன்ஜினியரிங் முடித்து விட்டு, வேலை கிடைத்து, முதல் முறையாக வெளியே வந்து தங்குவார்கள். இதற்கு முன் வீட்டிலிருந்தே படித்திருப்பார்கள்.ஆட்டுப்புழுக்கைகளாய் இருப்பார்கள்.அறையை பூட்ட மறந்திருப்பார்கள்,டாய்லெட்டில் பிளஷ் செய்ய மாட்டார்கள் ,சாக்ஸை துவைக்க மாட்டார்கள்,மழைக்காலத்தில் வெளியே போய்விட்டு வந்தாலோ, பாத்ரூமில் இருந்து வந்தாலோ, கிருஷ்ணர் பாதம் போல் தடங்கல் வைத்து கொண்டே வருவார்கள்.அடுத்து ஆந்திரவாலாக்கள். பெங்களூரில் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.அதிகரித்து கொண்டும் வருகிறது. இங்குள்ள அத்தனை PGயையும் நிர்வகிக்கிறவர்கள் ஆந்திரவாலாக்கள் தான். எனவே அதன் ஓனர்களும் ஆந்திரவாலாக்களாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். முக்கியமாக ரெட்டிகள். அடுத்து ஆந்திர இன்ஜினீரிகள்.பத்து வருடத்திற்கு  முன்னாள் ஆந்திர முதல்வர் ராஜசேகர்ரெட்டி ஆட்சியில் இன்ஜினியரிங் நுழைவுத்தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் படிப்புக்கான செலவை அரசே ஏற்று கொள்ளும் என்று சட்டம் போட்ட பின்பு,பல புதிய பொறியியல் கல்லூரிகள் முளைத்து அனைவரும் பொறியியல் படிப்பில் சேர்ந்து விடுகிறார்கள்.ஆந்திரா மற்றும் தெலுங்கானா இரண்டு மாநிலங்கள் சேர்த்து மொத்தம் கிட்டத்தட்ட 780 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கையில் பட்டம் வாங்கியதும் ஹைதராபாத் அமீர்பேட்டில் மூன்று மாதம் ஏதேனும் கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்து படித்து விட்டு பெங்களூருக்கு பஸ் ஏறி விடுகிறார்கள்.ஐ .டி  துறையில் இப்போது பொய்யான அனுபவ சான்றிதழ்கள் பெருகி விட்டது.முக்கியமான காரணம் இவர்களே. எந்த வித தயக்கமும் இன்றி,எந்த வித முன் அனுபவமும் இன்றி மூன்று வருஷம் நான்கு வருஷம் அனுபவம் என்று போட்டிருப்பார்கள்.இந்த மாதிரி பொய்யான சான்றிதழ்கள் தரும் கம்பெனிகள் ஹைட்ரபாதிலும் பெங்களூரிலும் நிறைய இருக்கின்றன.25000ரூபாய் வாங்கிக்கொள்கிறார்கள். ஏற்கனவே இவர்கள் மலேசியாவில் மார்க்கெட்டை கெடுத்து விட்டார்கள்.நான் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த போது ஆந்திரவாலாக்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.டெக்னாலஜியில் ஒரு மண்ணும் தெரியாது. ஐந்து வருடம் ஆறு வருடம் அனுபவம் என்பார்கள். இவர்களால் இப்போது மலேசியாவில் பிலிப்பைன்ஸ்காரர்களையும், இந்தோனேசியர்களையும் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். டெல்லிகாரர் ஒருவர் கூட வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.ஒரு முறை இன்டெர்வியூ சென்ற இடத்தில் நீங்க ரெட்டியா என்று ஒரு மலாய்காரர் கேட்டுவிட்டு இன்டெர்வியூ எடுத்தாராம். தேர்வான பிறகு சிறிது நாட்கள் கழித்து அவரிடம் ஏன் அப்படி கேட்டீர்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்னாராம் “Reddy’s fake experience” என்றாராம்.(இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.அவர்தான் இதை என்னிடம் சொன்னார்.அங்குள்ள மற்ற மாநிலத்தவர்களுக்கு இவர்கள் மேல் வெறுப்பு உண்டு.மார்க்கெட்டை கெடுக்கிறார்கள் என்று.) நல்ல மதிப்பெண் எடுத்து உண்மையான அனுபவத்தில் சேருவார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் இவர்களை விட அவர்களின் எண்ணிக்கை அதிகம்.நானே சில பேரை இன்டெர்வியூ எடுக்க நேர்ந்தது.நேர்காணலுக்கான கேள்வி பதில்களை மனப்பாடம் செய்திருப்பார்கள்.ப்ராக்டிகலாக ஒரு சிறிய கேள்வி கேட்டால் திரு திருவென விழிப்பார்கள்.இது தெரியாமல் ஆரம்பத்தில் நேர்காணலில் இவ்வாறு பதில் சொன்ன இருவரை தேர்வு செய்து விட்டேன்.பின் கோடிங் செய்ய சொன்னால் சுத்தமாக தெரியவில்லை.ஒரு மாதத்தில் சான்றிதழ் பொய் என்பதை கண்டுபிடித்து தூக்கி விட்டார்கள்.அதில் ஒருவன் அதன் பின்  L&Tஇல் வேலையில் சேர்ந்து விட்டான்.எனக்கு ரெபெரென்ஸ் வேண்டுமென்றால் தருவதாக சொல்லி இருக்கிறான்.எனக்கு வந்த சோதனை. ரெசியுமில் முன்னால் வேலை செய்த கம்பெனி என்று IBM, Capgemini என்று போட்டிருப்பார்கள்.நேர்காணலில் அதுவே நல்ல இம்ப்ரெஷனை கொடுத்துவிடும்.சான்றிதழ் கொடுக்கும் போது வேறொரு கம்பெனி பெயர் இருக்கும்.என்ன என்று விசாரித்தால் அது கிளைன்ட் கம்பெனி என்பார்கள்.ஆனால் கிளைன்ட் கம்பெனியில் வேலை பார்த்ததற்கான எந்த ஆதாரமும் இருக்காது.அத்தனையும் பொய்.என் கம்பெனியில் மூன்று வருடமாக SharePointஇல் வேலை செய்துகொண்டிருந்த ஒருவன் இடையே மூன்று மாதம் Devops கோர்ஸ் செய்தான்.இப்போது Devopsல் ஐந்து வருடம் அனுபவம் போட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான்.புதிய கம்பெனியில் எப்படி மேனேஜ் செய்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.எனது மேனேஜர் இனி தெலுகு, ஒடிஷா ஆட்களை எடுக்கவே கூடாது என்று சொல்லும்.அதுவும் தெலுகு தான்.ஆனால் சேர்ந்த பின்பு அவர்களிடம் தான் போய் கொஞ்சிக்கொண்டிருக்கும்.  தெலுங்கர்களுக்கிடையே நல்ல ஒற்றுமை,ஒரு அண்டர்ஸ்டாண்டிங் உள்ளது.நம்மூர் நாயக்கர்களிடம் கூட இதைக் காணலாம். இரண்டு விஷயம் பற்றி பேச விரும்புகிறார்கள்.ஒன்று சினிமா. சினிமா என்றாலும் கூட சினிமா பற்றிய அனலிசிஸ் ஆகவோ, உலக சினிமாவாகவோ கூட இருக்காது.பவன் கல்யாண் படம் வசூல் என்ன? அல்லு அர்ஜுன் அடுத்த படம் என்ன? என்ற அளவுக்குத் தான் இருக்கும்.மற்றொன்று எங்கு யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்?எந்த கம்பெனியில் எவ்வளவு கொடுக்கிறார்கள்? என்பது. பணத்தில் கண்ணாகத்தான் இருக்கிறார்கள்.

ஆந்திரவாலாக்கள் ரூம்மேட்டாக உள்ளதில் பெரும் பிரச்சனை எந்நேரம் அவர்களுக்கு டிவி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.முழுக்க சினிமாதான்.அதிலும் ஆரம்பத்தில் இருந்தவன் டிவியை போட்டு விட்டு, ஹெட் போனை மாட்டிக்கொண்டு, லேப்டாப்பை பார்த்துக்கொண்டிருப்பான்.நானோ டிவியே  பார்க்க மாட்டேன்.ஏதாவது புத்தகம் படிக்க நினைத்தாலோ,தூங்க நினைத்தாலோ முடியாது.அதிலும் கடைசியாக இருந்தவன் ஒரு பீப்பயல்.பெத்தாங்களா ,பேண்டாங்களா என்பார்களே.அவன் இரண்டாவது வகை.பிரெஷர் ஆந்திரவாலா.ஆறு மாதம் இருந்தான்.இரவு ஒன்னரை, இரண்டு மணிவரை விளக்கையும் போட்டுவிட்டு மொபைலில் சத்தமாக கலக்கப்போவது யாரு தெலுகு நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருப்பான்.அதன் பின் தூங்க ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் குறட்டையை ஆரம்பித்து விடுவான்.நானோ ஜிம்க்கு செல்வதால் குறைந்த பட்சம் ஏழு மணிநேரமாவது தூங்க வேண்டும்.பனிரெண்டு மணிக்கு படுத்தால் தான் காலை ஏழு மணிக்கு எழுந்து வேலைக்கு செல்ல முடியும்.இவன் இருந்த ஆறு மாதமும் குறைந்த பட்சம் ஆறு மணி நேரம் கூட தூங்க வில்லை.இரவோ காலையிலோ போன் வந்தால் வெளியே எழுந்து சென்று பேசவும் மாட்டான்.குறைந்த பட்சம் earphone  என்று ஓர் கண்டுபிடிப்பு நடந்தது அவனுக்கு தெரியுமாவென்று தெரியவில்லை. இன்னொரு கொடுமை.அவனுக்கு பொண்ணு நிச்சயம் செய்து இருப்பார்கள் போல. அதனிடம் பேசும்போது கூட போனை ஸ்பீக்கரில் போட்டு “முத்து பெட்டு” என்று கெஞ்சிக் கொண்டிருப்பான்.மொத்தமாக அவனுக்கு பக்கத்தில் நான் ஒரு ஜீவன் இருக்கிறதே அவனுக்கு தெரியாது.நானும் அவனை அறையை விட்டு விரட்ட என்னென்னவோ செய்து பார்த்தேன்.ம்ஹும்.ஒன்றும் வேலைக்காகவில்லை.கடைசியில் அவனுக்கு ஹைட்ரபாத்க்கு வேலைமாற்றம் வந்து அவனே போய்விட்டான்.இரவு ஏழு மணிக்கு அறையை காலி செய்து போனான்.சந்தோஷத்தில் மூன்று டின்பீர்கள் வாங்கி அறையில் வைத்து அடித்துக் கொண்டிருந்தேன்.ஒன்பது மணிவாக்கில் PG உரிமையாளர் ரெட்டி, ஒருவனோடு அறைக்கு வந்து புது ரூம்மேட் என்று விட்டு விட்டு போனார்.”Where are you from?” என்றேன்.ஏதோ ஊர் பேர் சொன்னான்.பின் என் முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்து விட்டு ஆந்திரா என்றான்.ஏடுகொண்டலவாடா..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s