வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-2

அங்கு நின்று கொண்டிருந்த இளவயது ரஷ்யர் என்னிடம் நல்ல ஆங்கிலத்தில் “Are you looking for something?” என்று கேட்டார்.”ஆம் .Fasol Hostel” என்று கையில் வைத்திருந்த விலாசத்தை காண்பித்தேன்.அதை தனது மொபைலில் கூகுள் மேப்பில் தேடி விட்டு “ஆம் இங்கு தான் இருக்கிறது” என்று கேள்வி பாவத்துடன் சொல்லிவிட்டு அவரும் முன்னும் பின்னும் சென்று எனக்காக  தேடிக் கொண்டிருந்தார். “இந்தியன்?” என்று கேட்டார்.”ஆம்” என்றேன். இறுதியில் ஹாஸ்டெலை கண்டுபிடித்துவிட்டார். ஹாஸ்டல் அங்கு இருந்த ஒரு கட்டிடத்தின் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -1

அடுத்து பயணத்திற்கு எங்கு செல்ல வேண்டும் என்பது எனக்கு பெரும்பாலும் திடீரென்று தற்செயலாகவே அகப்படுகிறது.அப்படிதான்  ரஷ்யப்பயணமும்.ஒரு நாள் தற்செயலாக ரஷ்ய பணத்தின் மதிப்பை எதற்கோ தேடப்போய் அது கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பிற்கே இணையாக இருந்து பின் விமான பயணத்திற்கான செலவு, விசா போன்றவற்றை தேடி எல்லாம் நமக்கு சாதமாக இருக்க சரி போகலாம் என்று முடிவு செய்தேன்.விசாவுக்கு ரஷ்யாவிலிருந்து ஒரு இன்விடேஷன் வாங்க வேண்டும்.அதையும் ஆன்லைனில் வாங்கி கொள்ளலாம். விமானச்சீட்டு, ரஷ்யாவில் தங்க ஹோட்டல் முன்பதிவு  […]

அர்னால்ட் : டோட்டல் ரீகால் -2

அந்த பாடிபில்டிங் காலங்களிலேயே தனது முதல் பிசினெஸ்ஸை துவக்கி விட்டார்.1968இல் சக பாடிபில்டரான Franco columbuவுடன் (Pumping Iron படத்தில் அர்னால்டுடன் கூடவே குட்டையாக இருப்பார்.அர்னால்டின் நெருக்கமான நண்பர்.இத்தாலியை சேர்ந்தவர்.இரண்டு முறை மிஸ்டர் ஒலிம்பியா பட்டம் வென்றவர் ) சேர்ந்து BrickLaying(சுவர் எழுப்புவது) பிசினெஸ்ஸை தொடங்குகிறார்கள். அது சிறப்பாக போகவே அதன் லாபத்தை கொண்டு பாடிபில்டிங் Nutrition supplements,equipments மெயில் ஆர்டர் பிசினெஸ்ஸை ஆரம்பிக்கிறார்.பின் ரியல் எஸ்டேட்டில் இறங்குகிறார். இப்படி வரிசையாக பிசினெஸ்ஸை வளர்த்து கொண்டே போகிறார்.இவ்வாறு […]

அர்னால்ட் : டோட்டல் ரீகால் -1

சில மாதங்களுக்கு முன்பு தினமும் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கணக்கிடுவதற்காக வரவு செலவு கணக்குகளை எழுத தொடங்கினேன்.மாத முடிவில், முதல் மாதம் கணக்கிட்டு பார்க்கையில் கணக்கில் 650ரூபாய் இடித்தது.அடுத்த மாதம் 400ரூபாய்.எப்படி யோசித்து பார்த்தாலும் எங்கு விட்டோமென கண்டுபிடிக்க முடியவில்லை.எங்கயாவது செலவு பண்ணிருப்போம். அப்புறம் கணக்கு எழுதுவதை நிறுத்திவிட்டேன். எனக்கு கை ஓட்டை.என் அண்ணனோ எனக்கு மேல்.தனியாக பிசினஸ் ஆரம்பித்தான். அதற்கே வரவு செலவு கணக்கு எழுதவில்லை.கடைசியில் நஷ்டம் அடைந்தது தான் மிச்சம்.குடும்ப வியாதி போல […]