அர்னால்ட் : டோட்டல் ரீகால் -2

அந்த பாடிபில்டிங் காலங்களிலேயே தனது முதல் பிசினெஸ்ஸை துவக்கி விட்டார்.1968இல் சக பாடிபில்டரான Franco columbuவுடன் (Pumping Iron படத்தில் அர்னால்டுடன் கூடவே குட்டையாக இருப்பார்.அர்னால்டின் நெருக்கமான நண்பர்.இத்தாலியை சேர்ந்தவர்.இரண்டு முறை மிஸ்டர் ஒலிம்பியா பட்டம் வென்றவர் ) சேர்ந்து BrickLaying(சுவர் எழுப்புவது) பிசினெஸ்ஸை தொடங்குகிறார்கள். அது சிறப்பாக போகவே அதன் லாபத்தை கொண்டு பாடிபில்டிங் Nutrition supplements,equipments மெயில் ஆர்டர் பிசினெஸ்ஸை ஆரம்பிக்கிறார்.பின் ரியல் எஸ்டேட்டில் இறங்குகிறார். இப்படி வரிசையாக பிசினெஸ்ஸை வளர்த்து கொண்டே போகிறார்.இவ்வாறு ஹாலிவுட்டில் நுழைவதற்கு முன்பே மில்லினியர் ஆகிவிட்டார். அர்னால்டு பிசினஸ் பற்றி குறிப்பிடும்போது ப்ரோமோஷன் பண்ணுவதை முதன்மையாக கூறுகிறார். உதாரணமாக அன்றைய பாடிபில்டிங் உலகம் இன்றைய தமிழ் இலக்கிய உலகம் போலவே இருந்தது.இலக்கியவாதிகளே இலக்கியம் எழுதி இலக்கியவாதிகள் மட்டுமே படித்துக்கொள்வது போல் பாடிபில்டிங் போட்டிகள் பாடிபில்டர்களை தவிர வேறு வெளியே தெரியவில்லை.சிறிய அரங்கில் வைத்து நடத்தி முடித்துவிடுவார்கள்.ஜிம்களும் ஆங்காங்கே மிகச்சிலவே இருந்தன. அதை பெரிய அளவில் கொண்டு சேர்க்க யாரும் முயலவில்லை. விளம்பரதாரர்கள் விரும்பவும் இல்லை.பாடிபில்டிங்கை நம்பி பிசினஸ் செய்யும் இவர்களுக்கு அப்போது ஓரளவு  வருமானம் வந்து கொண்டிருந்தது. விளம்பரப்படுத்தி வேறு யாரேனும் போட்டிக்கு வந்து விடுவார்களோ என்று பயந்தனர்.

ஆனால் அர்னால்டோ ஜிம்க்கும் சரி, அவர் பிஸினஸுக்கும் சரி,சினிமா ,அரசியலுக்கும் சரி விளம்பரத்திற்காக மெனக்கெடுகிறார்.(Promotion என்பதைத்தான் இங்கு விளம்பரம் என்று குறிப்பிடுகிறேன்)ஜிம்மிற்கு ஆள் சேர்க்க சக பாடிபில்டர்களுடன் ஜட்டியுடன் உடலை காட்டிக்கொண்டு தெருவில் ஊர்வலம் செல்கிறார்.சினிமா ப்ரோமோஷனுக்கு, ஆறு நாட்களுக்கு ஆறு நாடுகள் என்று டூர் செல்கிறார்.பாடிபில்டிங்கை ப்ரொமோட் பண்ண யார் எங்கு கூப்பிட்டாலும் போகிறார்.(Pumping Iron படத்தில் அவர் சிறையில் பாடிபில்டிங் ப்ரொமோட் செய்வதை காணலாம்) no matter what you do in life selling is part of it என்பதை வாழ்க்கை வெற்றிக்கு வழியாகச் சொல்கிறார். உன்னிடம் ஒரு திறமை இருக்கிறது.அதை மூடி வைத்து கொள்வதால் உனக்கும் லாபமில்லை பிறருக்கும் லாபமில்லை.அதனால் என்ன ப்ரோயஜனம்.

அர்னோல்டின் அடுத்த கனவு ஹாலிவுட்டில் ஸ்டார் ஆவது. ஏற்கனவே மிஸ்டர் யூனிவெர்ஸ் வெற்றி பெற்ற பின்பு ஹெர்குலஸ் இன் நியூயார்க் எனும் லோ பட்ஜெட் படத்தில் நடித்தார். இந்த படம் 1970இல் ரிலீஸ் ஆகி கண்டு கொள்ளப்படாமல் போய்விட்டது.அதன் பின் வந்த Stay Hungry படத்துக்காக சிறந்த புதுமுகத்துக்கான  கோல்டன் க்ளோப் விருதை பெறுகிறார். தான் வெறும் பாடி-ஷோகேஸ் மட்டும் இல்லை, நடிக்கவும் தெரியும் என்று இதன் மூலம் நிரூபித்தார்.

அடுத்து Conan the barbarian.1980இல் இந்தப் படம் சில தயாரிப்பு பிரச்சனையில் படப்பிடிப்பு தள்ளி போனது. Stay Hungry படத்திற்காக தனது உடம்பை குறைந்திருந்த அர்னால்டு மீண்டும் கோனன் படத்திற்காக ஏற்ற வேண்டும்.பார்த்தார்.இந்த ஆண்டு மிஸ்டர் ஒலிம்பியாவில் கலந்து கொண்டால் என்ன என்று முடிவெடுத்து கலந்து கொண்டார்.ஜெயித்து விட்டால் படத்திற்கும் ப்ரோமோஷன் ஆகி விடும் என்று நினைத்திருப்பார்.அந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பியா போட்டி சர்ச்சையில் முடிந்தது.ஏற்கனவே அவர் தனது பாடிபில்டிங்(போட்டிகளிலிருந்து)  ரிடைர்ட்மெண்டை அறிவித்திருந்தது எல்லோருக்கும் தெரிந்தது தான். போட்டிக்கு முந்திய நாள் வரை வேறு யாருக்கும் அவர் கலந்து கொள்வது தெரியாது. ஜிம்மில் தீவிர ஒர்க்அவுட் செய்யும் போது கூட கோனன் படத்திற்காக என்று கூறிவிட்டார்.இறுதியில் தனது ஏழாவது மிஸ்டர் ஒலிம்பியாவை அந்த ஆண்டு பெறுகிறார்.

அர்னால்ட்டுக்கு அந்த ஆண்டு சாம்பியன் பட்டம் கிடைத்தது சக பாடிபில்டர், பார்வையாளர்கள் என எல்லோரையும்  அதிருப்திக்கு உள்ளாக்கியது.ஏனெனில் அந்த ஆண்டில் கலந்து கொண்ட மற்ற முன்னணி பாடிபில்டர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அர்னால்டுக்கு musclesஉம்  body definitionஉம் இல்லை.கடைசி நேரத்தில்தான் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்து அதற்கான ட்ரைனிங்கை தாமதமாகத்தான் ஆரம்பித்திருந்தார். போட்டி முடிவை அறிவித்தவுடன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.இந்த தேர்வில் அர்னால்டின் செல்வாக்கு இருந்ததாக அனைவரும் கருதினர்.இரண்டாவதாக வந்த Dickerson “I can’t believe it!” என்று கூறி மேடையிலிருந்த வெளியே குதித்தார்.ஒரு போட்டியாளர்( Frank Zane) மேடையின் பின்புறம் தனது ட்ரோபியை போட்டு உடைத்தார்.மற்ற சில போட்டியாளர்கள் அடுத்த ஆண்டு போட்டியில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தனர். CBS Television இப்போட்டியை பதிவு செய்திருந்தாலும் அதை ஒளிபரப்பு செய்யவில்லை.அர்னால்டு இதை பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை.இப்போட்டி அர்னால்ட்டுக்கு அனைவரிடமும் முக்கியமாக  பாடிபில்டர்கள் மத்தியில் கெட்ட பெயரை வாங்கி தந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இது தான் அர்னால்டு.தான் ஜெயிப்பதற்கு எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்கிறார்.அவரே சொல்கிறார் “Leave no stone unturned”.

அந்த ஆண்டே கோனன் திரைப்படம் வெளியாகி ஹிட் ஆகிறது.பின் டெர்மினேட்டர் என தொடர்ந்து ஹிட் படங்கள். ஹாலிவுட்டின் மிகப்பெரும் ஆக்ஷன் ஸ்டாராக மாறுகிறார்.ஒவ்வொரு படத்திற்கும் முந்தைய படத்தை விட இரண்டு மடங்கு சம்பளம்,லாபத்தில் பங்கு என்று சம்பளம் ஏறிக்கொண்டே போகிறது.

இதற்கிடையில் தனது வருங்கால மனைவி maria shriverஐ சந்திக்கிறார்.( இதற்கு முன் அர்னால்டுக்கு ஒரு கேர்ள் ப்ரெண்ட் இருந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.அந்த பெண் கல்யாணத்துக்கு வற்புறுத்த,அர்னால்டோ இலட்சியத்தை அடையாமல் கல்யாணம் செய்ய முடியாது என்று முடிவாக கூறிவிட பிரிந்து விட்டனர்.)கென்னடி குடும்பத்தை சேர்ந்த இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் கென்னெடியின் சொந்த சகோதரி மகள்.(உண்மையிலேயே அர்னால்டுக்கு பெருசா தான் இருக்கணும்.மச்சம்). இவர் குடும்பமே டெமோகிராடிக் கட்சியை சேர்ந்தது.ஆனால் அர்னால்டு ரிபப்லிக்கன் கட்சியை சேர்ந்தவர்.(இரண்டு கட்சிகளும் நம்மூர் பிஜேபி, காங்கிரஸ் போல )அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் பெரிய புஷ்க்காக பிரச்சாரம் செய்தவர்.பின்னர் அந்த கட்சியின் சார்பாக நின்று கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் ஆகவும் செய்தார். ஆனால் இந்த வித்தியாசம் அவர்கள் காதலுக்கோ கல்யாணத்துக்கோ தடையாக இல்லை.1986இல் திருமணம் செய்து,இருபத்தைந்து வருட திருமண வாழ்க்கை 2011இல் விவகாரத்தில் முடிந்தது.அதற்கு காரணம் அர்னால்டு வீட்டில் அவர்களின் குழந்தைகளுக்கு ஆயாவாக(nanny) பணி புரிந்து கொண்டிருந்த பெண்ணின் மகன் அர்னால்டு போலவே இருந்தது தான்.ஆம் அர்னால்டு கைவரிசையை காட்டி இருக்கிறார்.

அர்னால்டு பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக் போலத்தான் தெரிகிறது.அவர் மேல் நிறைய புகார்கள் இருந்திருக்கிறது.உடன் பணிபுரியும் பெண்களிடம் அங்கு தொடுவதும்,இங்கு தட்டுவதுமாக இருந்திருக்கிறார்.அதற்காக வருந்தி வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டுருக்கிறார்.Batman & Robin படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம் ,வீட்டில் மனைவி இல்லாததை பயன்படுத்தி தப்பு பண்ணி இருக்கிறார்கள். பின் அதை அவரும் மறந்து விட்டார்.அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது.குழந்தையின் அப்பா தனது முன்னாள் காதலன் என்று எல்லாரிடமும் கூறி விடுகிறாள்.குழந்தை வளர வளர தனது ஜாடையில் இருப்பதை அர்னால்டு உணர்ந்து கொள்கிறார்.விசாரிக்கையில் உண்மை வெளி வருகிறது.வெகு நாட்களுக்கு பின் அர்னால்டின் மனைவிக்கும் சந்தேகம் வர, விவாகரத்தில் முடிகிறது.கவர்னராக இருந்த வரை அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.அவ்வப்போது எக்ஸ்பெண்டபிள்ஸ் போன்ற படத்தில் கவுரவ வேடத்தில் தலை காட்டிவிட்டு போய் விடுவார்.2011இல் கவர்னர் பதவியிலிருந்து விலகிய பிறகு மீண்டும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.வயதானதால் முன் போன்று ஆக்ஷன் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.அவருக்கு பதிலாக இப்போது அது போன்ற படங்களில் Dwayne Johnson நடித்து கொண்டிருக்கிறார்.

சென்ற துறைகளில் எல்லாம் ஒரு உச்ச நட்சத்திரமாகவே இருந்திருக்கிறார். அர்னால்டின் வெற்றி சூத்திரம் என நான் கண்டறிந்தது Pi~(frac{PR(p_j)}) என்பது தான்.ஹி ..ஹி.சும்மா.அவரது தன்னம்பிக்கை.அதை கர்வம் என்று கூட சொல்லலாம். அவரது உடலால் அவருக்கு வந்த கர்வம். என்ன செய்ய வேண்டும், எதை அடைய வேண்டும் என்று நினைத்து மட்டும் கொள்வதில்லை.எழுதி வைத்து கொள்கிறார்.உதாரணமாக அடுத்த வருடம் மிஸ்டர் யூனிவெர்சில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது இவ்வளவு டாலர் சம்பாதிக்க வேண்டும் என்று எழுதி வைத்து அதற்காக உழைக்கிறார். எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்.ஆஸ்திரியாவில் இருந்து வெளியே வரும்போது அவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது.கல்லூரியில் சேருகிறார். ஆங்கிலம் கற்று கொள்கிறார்.சந்தேகம் கேட்கிறார்.நடிக்க முடிவெடுத்தவுடன் நடிக்க கற்றுக் கொள்கிறார்.தனக்கு என்ன வேண்டும் என்று முடிவு செய்து வைத்து கொண்டு அதை நோக்கி தன்னை செலுத்துகிறார்.சோம்பேறித் தனமாக உட்காரவில்லை.

அவரை போல நிறைய பேர் Joe Weiderஇன் அழைப்பில் வந்து ட்ரைனிங் எடுத்து கொண்டு இருந்தார்கள்.காலை, மாலை ஒர்கவுட் முடிந்ததும் மற்ற நேரங்களில் சும்மா படுத்து கொண்டிருப்பார்கள். அர்னால்டு இதை வெறுக்கிறார்.அந்த மாதிரி நேரங்களை அர்னால்டு தனது பிசினெஸுக்கு பயன்படுத்தி கொள்கிறார். Joe Weiderஇன் supplements விற்கும் கடையில் வேலைக்கு உதவுவதாக கேட்டுக் கொள்கிறார்.எனவே பிசினஸ் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம், ஆங்கிலமும் பழகிக்கொள்ளலாம் என்று. எது நமக்கு வருகிறது எது நமக்கு பிடிக்கிறது என்று தேர்ந்தெடுத்து ஒரு இலட்சியத்தை செட் செய்து அதை நோக்கி தீவிரமாகவும் அர்ப்பணிப்புடனும் உழைத்து அதை அடையும் போது அடுத்த இலட்சியத்தை செட் செய்து பின் அதை நோக்கி போவது. What doesn’t kill u makes you stronger.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s