பாபாஜி, ரமணர், யோகானந்தா, இலியானா

மூன்று வருடத்திற்கு முன்பு எனது அண்ணனின் நண்பர் ஒருவர் பாபா திரைப்படத்தின் கதை தன்னுடையது தான் என்று சுற்றிக்கொண்டிருந்தார். கதை என்றால் அவர் எழுதிய கதை அல்ல அவரது வாழ்க்கையையே ரஜினி படமாக எடுத்திருக்கிறார் என்று. நிஜமாகத்தான். எல்லா விதமான கெட்ட பழக்கங்களும் உள்ளவன் பின் திருந்தி ஆன்மீக வழியில் செல்வது. இது தான் அவர் பாபா படத்திலிருந்து தன் வாழ்க்கையாக கண்டு கொண்ட கதை. அப்படி என்ன ஆன்மீகத்தை  அடைந்தார் என்று தெரியவில்லை. இப்போது அவருக்கு […]

நான் வந்துட்டேன்னு சொல்லு..

சென்ற மாத கடைசியில் ஜெயமோகன் தளத்திற்கு எழுதிய கடிதத்தில் இப்படிக்கு என்று எனது பெயரையும், இந்த இணையதள முகவரியையும் கொடுத்திருந்தேன். அங்கிருந்து யாராவது வந்து பார்ப்பார்கள் என்ற சில்லறை புத்திதான். இந்த இணையத்தளம் ஆரம்பித்து ஐந்து மாதங்களாக  இந்த தளத்தின் வருகையாளர்கள்  எண்ணிக்கை ஒரு நாளுக்கு மூன்று தான். மூன்றும் நான் தான். என் மொபைலில், என் மடிக்கணினியில் அப்புறம்  என் அலுவலக கணினியில் பார்ப்பேன். ஆனால் அந்த கடிதம் அவரது இணையதளத்தில் பிரசுரமான அன்று இருநூற்று […]

ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?- எதிர்வினை

ஜெயமோகன் தளத்தில் அவர் கூறியிருந்த ஒரு பதிலுக்கு எதிர் வினைஆற்றி ஒரு கட்டுரை . அவரது தளத்தில் பிரசுரமாயிருந்தது    அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா?(http://www.jeyamohan.in/101766#.WakeUrIjHIU) என்ற கேள்விக்கு உங்கள் பதிலைப் படித்தேன். இதை எந்த மனநிலையில் நீங்கள் எழுதினீர்கள் என்று தெரியவில்லை. உங்களிடம் இருந்து இவ்வளவு ஒரு தலை பட்சமான பதில் வந்தது வருத்தத்திற்குரியதுதான். ஒரு பக்கத்தில் நின்று கொண்டு அதற்கான காரணங்களை சப்பைக்கட்டு கட்டுவது போலத்தான் தெரிகிறது. நீங்கள் சொல்வது, கோவிலில் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம் -8

காலை குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வரும்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க தமிழர் போன்ற ஒருவர்  நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது அவரிடம் ஒன்றும் பேசவில்லை. நேராக அறைக்கு வந்து கிளம்பி விட்டேன். அறையில் இருந்த ஜோடி தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கீழ் படுக்கையில் படுத்து கொஞ்சிக் கொண்டிருப்பார்கள்.கூட இருந்த மற்றொருவன் தூங்கிக்கொண்டிருப்பான். சாப்பிடும் அறை, அதை சாப்பிடும் அறை என்றெல்லாம் சொல்ல முடியாது meeting அறை என்று சொல்லலாம், எனது அறைக்கு […]

ஜார் அரியணை -1

ரஷ்ய ஜார் மன்னர்களின் ஆட்சியில் அடுத்து யார் அரியணைக்கு வரவேண்டும் என்பதில் அதிர்ஷ்டம், துரோகம், தற்செயல், பேராசை, சுயநலம், காமம் இவை எல்லாம் முக்கியப் பங்கு வகித்தன. அந்த வரலாற்றை பின் வரும் சில கட்டுரைகளில் காண்போம். இந்த வரலாற்றை முதலாம் பீட்டர் மன்னரிடமிருந்தது ஆரம்பிக்கிறேன். ஜார் மன்னர் பியோதர் இறந்த பிறகு அடுத்து யார் அரியணை ஏறுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. 1682இல் உடல்நலக்குறைவால் இறந்த போது அவருக்கு வயது 20. இயல்பாகவே பலவீனமானவர். முதல் […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-7

செயின்ட் பீட்டர்ஸ்பர்க். நேவா நதிக்கரையில்(நதியின் மீது) அமைந்துள்ள இந்த நகரம் ரஷ்யாவின் முக்கிய துறைமுகநகரம். பெட்ரோக்ராட், லெனின்க்ராட், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த நகரம் பீட்டர் ஜார் மன்னரால் நிறுவப்பட்டது. பீட்டர் மன்னர் கடல் வழி வாணிபத்திற்காக ரஷ்யாவிற்கு ஒரு துறைமுகம் வேண்டும் என்று விரும்பினார். எனவே 1703இல் நேவா நதிக்கரையில் அமைந்திருந்த இங்கெர்மன்லேண்ட் (Ingermanland) என்று அழைக்கப்பட்ட ஸ்வீடிய காலனிய ஆதிக்கத்தில் இருந்த பகுதியை கைப்பற்றினார். நேவா நதி பால்டிக் கடலோடு […]

வெண்ணிற இரவுகள்: ரஷ்யப்பயணம்-6

இன்று Izmailovsky மார்க்கெட் செல்வதாக திட்டம். எப்படியும் மதியம் 12 மணிக்குத்தான் அறையை காலிசெய்ய வேண்டும். காலை 11 மணிக்கு தான் மார்க்கெட் திறக்கும். அதனால் ஒரு 10.30க்கு அங்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று காலையிலே சீக்கிரமாக எழுந்து கிளம்பினேன. வரவேற்பறையில் இப்போது அந்த கோமட்டிப்பயல் உட்கார்ந்திருந்தான். அவனிடம் சென்று விசா ரெஜிஸ்டர் பற்றி விசாரித்தேன். அவனும் தேடித் பார்த்து விட்டு செய்யவில்லை என்றான். சரி இன்று செய்து தர முடியுமா? என்று கேட்டேன். எப்பொழுது […]