கோவா ஹிப்பிகள்

“அண்ணே, திருமணமாகாத ஒவ்வொரு இளைஞனும் கண்டிப்பாக சென்று  பார்க்க வேண்டிய இடம், கோவா” என்று இதற்கு முன் கோவா சென்றிடாத எவனோ ஏற்றிவிட சகபாடி கனவில் நீச்சல் உடையில் கடற்கரையோரம் ஓடி வரும் வெள்ளைக்காரிகள் வரத்தொடங்கிவிட்டார்கள். ஒரு நாள் எனக்கு போன் போட்டு கண்டிப்பாக கோவா போறோம் என்று சொல்லிவிட்டான். இரண்டு வருடத்திற்கு முன்பும் இதே தான் சொன்னான். கடைசியில் நான் மட்டும் தான்  தனியாக ராஜஸ்தான் சென்று வந்தேன். கனவுகளில் வெள்ளைக்காரிகளின் சேட்டை அதிகமாக அடுத்த […]

Amarcord- ஒரு கனவு

வெள்ளி, சனி தண்ணி அடித்துவிட்டு  நேரத்தை வீணடித்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியிலும், கலைச்சேவை ஆற்ற வேண்டும் என்ற உந்துதலிலும் ஞாயிற்றுக்கிழமை பகலில் புத்தகம் படிப்பதும் இரவில் முடிந்தால் ஏதேனும் உலக சினிமாவும் பார்ப்பதும் வழக்கம். இதே வழக்கப்படி சென்ற வாரம் பார்ப்பதற்காக இரண்டு படங்களை தேர்வு செய்து வைத்திருந்தேன். விக்ரமாதித்ய மோட்வானே இயக்கி 2010இல் வெளிவந்த  உடான்(Udaan) எனும் இந்தி திரைப்படம் மற்றும் பெலினி(Federico Fellini) இயக்கி 1973இல் வெளிவந்த அமர்கார்ட் (அய்யோ! அதை @#**^ […]

பச்சோந்தி மனிதன்

புதுக் கம்பெனியில் சேர்ந்த பிறகு அங்குள்ள நண்பர்களுடன் இடைவெளி வேளைகளில் டீக்கோ அல்லது மதிய உணவுக்கோ செல்வது வழக்கம். எல்லாரும் சில பல வருடங்கள் அதே கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். திருமணம் ஆனவர்கள். நல்ல சம்பளம். இரண்டு விஷயங்கள் பற்றி தான் எப்போதும் பேச்சு. ஒன்று எந்த ஹோட்டலில் என்ன டிஷ் நன்றாக இருக்கும்.இன்னொன்று கார். அதிலும் முக்கியமாக கார். எனக்கு இரண்டிலும் எந்த விதமான ஈடுபாடும் கிடையாது. எப்போதும் கார்களை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.யார் என்ன […]

அடுத்த பதிவு

2018க்கான பட்ஜெட் வெளியான நாளில் இருந்தே இந்தியாவின் ஷேர் மார்க்கெட் படுத்த படுத்தையாய் இருக்கிறது . ஷேர் மார்க்கெட்டில் வரும் லாபத்திற்கு வரியை அதிகரித்து இருக்கிறார்களாம். அது மட்டுமே காரணமாக இருக்காது. இது மாதிரி, எந்த விதமான நிகழ்வுகள் நடந்தாலும் ஷேர் மார்க்கெட் இறங்கி அடுத்த வாரம் பழைய படி வந்து விடும். என்ன நடக்கிறது என்பது அதில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும். உனக்கென்ன வந்தது என்று கேட்கிறீர்களா? அது சரி Margot robbieக்கும் மண்குண்டான்பட்டிக்கும் என்ன சம்பந்தம். […]

குற்றமும் தண்டனையும் நாவல் – சில எண்ணங்கள்

எது குற்றம்? ஒருவருக்கு குற்றமாகப்படுவது இன்னொருவருக்கு குற்றமாக இல்லாமல் போகலாம். இப்போது குற்றமாக இருப்பது எதிர்காலத்தில் குற்றமற்றதாகிப் போகலாம். ஏன் ஒருவருக்கு ஒரு மனநிலையில் குற்றமாக இருப்பது இன்னொரு மனநிலையில் இல்லாமல் போகலாம். குற்றத்திற்கு எது தண்டனை? ஒவ்வொரு குற்றத்திற்கும் தண்டனையை சமூகம் வகுத்துள்ளது. ஆனால் எல்லா குற்றத்திலும் நேரடடியாகவோ மறைமுகமாவோ சமூகத்திற்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது. அப்படி இருக்கும் போது தண்டனை யார் தருவது?மன்னிக்கவோ தண்டிக்கவோ யாருக்கு தகுதி இருக்கிறது? இவ்வாறு குற்றத்தைப்  பற்றியும் […]

குற்றமும் தண்டனையும்- படத்தொகுப்பு

சென்ற ரஷ்ய பயணத்தின் போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் குற்றமும் தண்டனையும் நாவல் நடந்த இடங்களை சென்று பார்த்து வந்ததின் சிறிய படத்தொகுப்பு இது. அந்த நாவல் நடந்த ஜூலை மாதத்தில் தான் நானும் பயணம் சென்றிருந்தேன் என்பது இனிய தற்ச்செயல். தஸ்தேவ்ஸ்கியின் நாவலில் குற்றமும் தண்டனையும், வெண்ணிற இரவுகள் மட்டும் தான் படித்திருந்தேன். குற்றமும் தண்டனையும், ரஷ்யா போவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு தான் முடித்தேன். அதனால் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பயணிக்கும் போது நாவலின் கனவிலேயே இருக்க […]

வயதாகிவிட்டது

‘இப்ப வர பாட்டு ஒண்ணும் கேக்குற மாதிரியே இல்ல’ என்ற எண்ணம் எழுந்தாலே வயதாகி விட்டது என்று தானே அர்த்தம். எனக்கு வயதாகிவிட்டது. இங்கு ‘இப்போது’ என்பதை கடந்த ஐந்து ஆண்டுகள் என்று கொள்க. எனக்கு டிவி பார்க்கும் பழக்கம் இல்லை. ரேடியோவும் கேட்பதில்லை. அதனால் இப்ப வரும் பாடல்களை அதிகம் கேட்பதில்லை. கேட்ட சில பாடல்கள் மூலம் எந்த லட்சணத்தில் இப்போது பாடல் வருகின்றன என்று தெரிகிறது. முதலில் கேட்கும் போது நன்றாக தெரியும் பாடல்களும் […]